மணிப்பூர் வன்முறை – இன்று அனைத்து கட்சி கூட்டம்!
மணிப்பூரில் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நீடித்துவரும் இன வன்முறை, தேசத்தின் துயரமாக மாறியிருக்கிறது. மணிப்பூர் மாநிலம் தொடர்ந்து பற்றியெரிந்துகொண்டிருக்கும் நிலையில், அங்கு அமைதியை நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக எழுந்திருக்கிறது.

இந்நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை இன்று கூட்டவிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில், “மணிப்பூர் நிலைமை குறித்து விவாதிக்க ஜூன் 24-ம் தேதி(இன்று) மாலை 3 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அமித் ஷா கூட்டியிருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இன்று கூட்டம் நடைபெறும். இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் நிலையில் திமுக சார்பில் திருச்சி சிவா எம்.பி பங்கேற்கிறார்.

