Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

"செந்தில் பாலாஜியை நேரில் சென்று பார்க்காத தன்மானமிக்க ஒரே அமைச்சர் பிடிஆர்-தான்" – ஆர்.பி.உதயகுமார்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 19, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
"செந்தில் பாலாஜியை நேரில் சென்று பார்க்காத தன்மானமிக்க ஒரே அமைச்சர் பிடிஆர்-தான்" - ஆர்.பி.உதயகுமார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

“ `மோடிக்கும், E.D-க்கும் பயப்பட மாட்டோம்’ என்று சொல்கிறீர்கள். முன்பு இதே பிரதமரைச் சந்தித்துப் பாவமன்னிப்பு கேட்டீர்கள்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உதயநிதி ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஆர்.பி.உதயகுமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஜல்லிக்கட்டு பாராட்டு விழா என்கிற பெயரில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார். தெரிந்து பேசினாரா, எழுதிக் கொடுத்ததைப் பேசினாரா என்று தெரியவில்லை.

`அரசியல் ஜல்லிக்கட்டு மூலம் 2021-ம் ஆண்டு தேர்தலில் அடிமைகளை விரட்டிவிட்டோம், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடிப்போம்’ என்றும், தாங்கள்தான் தமிழ் மக்களுடைய காவலர்போலவும், தமிழ் இனத்துக்காக நடந்த போராட்டங்களில் சிறுவயது முதல் பங்கேற்று சிறைக்குச் சென்றதுபோலவும் பேசியிருக்கிறார்.

தன் தந்தை, தாத்தா பெயரைச் சொல்லி, அரசியலில் புறவாசல் வழியாக வந்தது உதயநிதி ஸ்டாலின்தான். 2016, 2021 ஆண்டுகளில் சட்டசபை மாடத்தில் பார்வையாளராக இருந்த உதயநிதி, ஒரே நேரத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் உழைத்து வந்தாரா… புறவாசல் வழியாக வந்தாரா…

உதயநிதி ஸ்டாலின்

`2021-ம் ஆண்டில் அடிமை அரசை விரட்டிவிட்டோம்’ என்று கூறியிருக்கும் உதயநிதி ஸ்டாலினே, சற்று சிந்தித்துப் பாருங்கள், தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சியாகி தந்தை பெரியாரின் திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியில், தன் பேச்சால் உழைப்பால் ஆட்சியில் அமர்ந்த அண்ணாவுக்கு உறுதுணையாக இருந்தவர் எம்.ஜி.ஆர்.

அதைத் தொடர்ந்து புரட்சித் தலைவர் இயக்கம் தொடங்கி ஆட்சியில் அமர்ந்தபின்பு, உங்கள் தாத்தாவால் கோட்டைப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்க முடியவில்லை.

அதேபோல் புரட்சித் தலைவி இருந்தவரை, உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தினுள் பார்வையாளராகத்தான் வர முடிந்ததே தவிர, சட்டமன்ற உறுப்பினராக வர முடியவில்லை என்பதை எண்ணிப் பார்த்து நாவடக்கத்தோடு, அரசியல் நாகரிகத்தோடு பேச வேண்டும்.

`மோடிக்கும், E.D-க்கும் பயப்பட மாட்டோம்’ என்று சொல்கிறீர்கள். முன்பு இதே பிரதமரை நீங்கள் சந்தித்துப் பாவமன்னிப்பு கேட்டீர்கள். அதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மோடியிடம் ஸ்டாலின் கொஞ்சிக்குழாவினார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது `கோபேக் மோடி’ என்று சொல்லிவிட்டு, ஆளுங்கட்சியாக வந்தவுடன் `கம்பேக் மோடி’ என்று கூறினீர்கள்.

செந்தில் பாலாஜி

அடிமை என்று எங்களைச் சொல்கிற உதயநிதி ஸ்டாலின் அவர்களே, இன்று செந்தில் பாலாஜி என்கிற ஒற்றை நபருக்கு ஒட்டுமொத்த திராவிட முன்னேற்றக் கழகமும், தி.மு.க குடும்பமும் அடிமையாக இருக்கிறதா… இல்லையா? செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணையில், உங்களுக்கு இடி விழுந்து போயிருக்கிறதே என்று மக்கள் கேட்கிறார்கள்.

ஐந்து பவுன் நகை அடமானம் வைத்தால், தள்ளுபடி செய்யப்படும் என்று சொல்லிவிட்டு, தற்போது தகுதி உள்ளவர்களுக்கு மட்டும்தான் தருவோம் என்று கூறியிருக்கிறீர்கள். இதன் மூலம் 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

நீட் தேர்வு ரத்தாகும் என்ற உங்கள் வார்த்தையை நம்பி,  லட்சக்கணக்கான இளைஞர்கள் நடுரோட்டில் நிற்கிறார்களே… ஆயிரம் ரூபாய் தருவோம் என்று சொன்ன உங்கள் வார்த்தையை நம்பி, இன்றைக்கு கோடிக்கணக்கான பேர் நடுத்தெருவில் நிற்கிறார்கள்… இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

அமைச்சர் பி.டி.ஆர்

செந்தில் பாலாஜியைப் பார்க்க அனைத்து அமைச்சர்களும் சென்றனர். ஆனால், தன்மானமுள்ள ஒரே அமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன் மட்டும் செல்லவில்லை. `ரூ.30,000 கோடியை உதயநிதியும், சபரீசனும் எங்கே வைப்பது என்பது தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று அவர்தான் சொன்னார். அந்த ஆடியோ விவகாரம் இன்றுவரைக்கும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுப்பாரா?

நீங்கள் பேசுவதை தொண்டர்கள் ரசிப்பதாகத் தவறான தகவலை உங்களிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், யாரும் ரசிக்கவில்லை. நீங்கள் 5 முறை தமிழகத்தில் ஆட்சி செய்தபோது கொண்டுவராத எய்ம்ஸ் மருத்துவமனையை, எடப்பாடியார் கொண்டு வந்தார். நீங்கள் ஒரு செங்கலைக் காட்டிப் பிரசாரம் செய்தீர்கள். ஆனால் ஒரு செங்கலாவது உங்களால் வைக்க முடிந்ததா?

ஆர்.பி.உதயகுமார்

ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை, பல திட்டங்கள், சாலைக் கட்டமைப்பு, மேம்பாலங்களை மத்திய அரசிடம் ராஜதந்திரத்துடன் எடப்பாடியார் பெற்றுத் தந்ததை அடிமைத்தனம் என்பதா… உங்கள் தாத்தா கலைஞருக்கு மதுரையில் நூலகத்தைக் கட்டி முடித்திருக்கிறீர்களே, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு என்ன முயற்சி எடுத்தீர்கள்? 

தினந்தோறும் ஒரு கோடி மது பாட்டில்கள் விற்பனை ஆகின்றன. பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாகப் பெற்றால், நாள்தோறும் 10 கோடி ரூபாய், மாதத்துக்கு 300 கோடி ரூபாய், வருடத்துக்கு 3,600 கோடி ரூபாய் என்கிற அளவிலே உயர்ந்திருக்கிறது. இதையெலாம் புரிந்து கொள்ளாமல், அரசியல் நாகரிகம் இல்லாமல் பேசக்கூடாது” என்று கூறினார்.

“மோடிக்கும் பயப்பட மாட்டோம்; இ.டி-க்கும் பயப்பட மாட்டோம்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

.

Tags: quotசநதலஅமசசரஆர.ப.உதயகமரஒரசனறதனமனமககநரலபடஆரதனquotபரககதபலஜய
Previous Post

வாரம் ஒரு அமைச்சர்.. பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்குவீர்களா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

Next Post

நம்ம ஊர் பர்ஃபி எங்க போய் இருக்கு பாருங்க! போருக்கு நடுவே ஜெலன்ஸ்கி புன்னகை! கொடுத்தது யார் தெரியுமா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நம்ம ஊர் பர்ஃபி எங்க போய் இருக்கு பாருங்க! போருக்கு நடுவே ஜெலன்ஸ்கி புன்னகை! கொடுத்தது யார் தெரியுமா

நம்ம ஊர் பர்ஃபி எங்க போய் இருக்கு பாருங்க! போருக்கு நடுவே ஜெலன்ஸ்கி புன்னகை! கொடுத்தது யார் தெரியுமா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In