Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நம்ம ஊர் பர்ஃபி எங்க போய் இருக்கு பாருங்க! போருக்கு நடுவே ஜெலன்ஸ்கி புன்னகை! கொடுத்தது யார் தெரியுமா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 19, 2023
in அரசியல் செய்திகள்
0
நம்ம ஊர் பர்ஃபி எங்க போய் இருக்கு பாருங்க! போருக்கு நடுவே ஜெலன்ஸ்கி புன்னகை! கொடுத்தது யார் தெரியுமா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

International oi-Vigneshkumar
Published: Monday, June 19, 2023, 15:05 [IST]
லண்டன்: உக்ரைன் போர் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், ரொம்பவே புகழ்பெற்ற இந்திய ஸ்வீட்களில் ஒன்றான பர்ஃபியை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சுவைத்துள்ளார். கடந்தாண்டு உக்ரைன் போர் ஆரம்பித்த நிலையில், அது தொடர் கதை போலத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முதலில் இந்த போர் சில நாட்கள் அல்லது அதிகபட்சம் சில வாரங்களில் முடியும் என்றே பலரும் நினைத்தனர். இருப்பினும், இந்தப் போர் ஓராண்டைக் கடந்தும் இப்போதும் தொடர்ந்தே வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர உலகின் அனைத்து நாடுகளும் முயன்றாலும் அதில் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை. உக்ரைன் போர்: இடையில் சில காலமாகப் போர் குறித்து எந்தவொரு செய்தியும் பெரியளவில் வராமல் இருந்த நிலையில், இப்போது போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதலைத் தீவிரமாக்கியுள்ளன. இரு நாடுகளும் டிரோன் தாக்குதல்களைக் கூட தீவிரமாக்கி வருகிறது. குறிப்பாக க்ரீமியா பகுதியில் உள்ள மிகப் பெரிய அணை சமீபத்தில் தகர்க்கப்பட்டது. இதில் அருகில் இருந்த ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், சிலர் உயிரிழக்கவும் செய்தனர். இதற்கும் இரு நாடுகளும் மாறி மாறி குற்றஞ்சாட்டிக் கொண்டன. போர் இப்படிப் பரபரப்பாகச் செல்லும் நிலையில், புகழ்பெற்ற இந்திய ஸ்வீட்டான பர்ஃபியை ஜெலன்கிஸி சுவைக்கும் வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அவரது தாயார் வீட்டில் செய்த பர்ஃபியை கொடுத்தார். அதைத் தான் ஜெலன்ஸ்கி ரசித்து ருசித்து சாப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். “அணு ஆயுதங்கள்..” ஆட்டத்தை ஆரம்பிக்கும் ரஷ்யா? மறுபுறம் ஜெலன்ஸ்கி பரபர தகவல்! கவனிக்கும் உலக நாடுகள் பர்ஃபி: இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “எனது அம்மா வீட்டில் அவரே செய்த சில இந்திய இனிப்புகள் என்னிடம் கொடுத்தார். இவை தான் பர்ஃபி. சமீபத்தில் தான் அவர் எனக்கு இந்த இனிப்புகளைக் கொடுத்தார். அந்த நேரத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி என்னைச் சந்திக்க வந்திருந்தார். நாங்கள் இருவரும் பல விஷயங்கள் குறித்து ஆலோசித்தும். அவர் பசியுடன் இருப்பதை உணர்ந்த நான் அவருக்கு என் அம்மா செய்த சில பர்ஃபிக்களை கொடுத்தேன்” என்று அவர் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோவை பிரிட்டன் பிரதமரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமும் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ உடனடியாக இணையத்தில் டிரெண்டான நிலையில் பலரும் பல வித கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன் ஒருவர், “நீங்கள் பிரதமராக இருந்தாலும் சரி, சாதாரண மனிதராக இருந்தாலும் சரி.. உங்கள் அம்மா செய்து கொடுத்த பர்ஃபியின் சுவை வேறு எங்கும் கிடைக்காது” எனப் பதிவிட்டுள்ளார். அதிநவீன போர் விமானங்கள்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஆயுதங்களைப் பெற சமீபத்தில் பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருந்தார். உக்ரைன் போரில் ரஷ்யாவுக்குப் பதிலடி தர F-16 விமானங்களை உக்ரைன் தொடர்ந்து கேட்டு வந்தது. அமெரிக்காவில் செய்யப்படும் அதிநவீன F-16 விமானங்களை உக்ரைன் பெறவுள்ள நிலையில், அந்நாட்டு விமானிகளுக்கு இதை இயக்க பயிற்சியை அளிப்பது குறித்தும் இரு நாடு தலைவர்களும் ஆலோசித்தனர். அதிநவீன இந்த F-16 போர் விமானங்கள் மட்டும் உக்ரைன் வசம் சென்றால் அது நிச்சயம் போரைப் புரட்டிப் போடும் என்பதில் சந்தேகமே இல்லை. உக்ரைன் இந்த நவீன போர் விமானங்களை வாங்க உதவும் வகையில் ஒரு சர்வதேச கூட்டு முயற்சியை எடுக்க வேண்டும் என சுனக் வலியுறுத்தியுள்ளார். மேலும், 200 கி.மீ வரை செல்லும் தாக்குதல் ட்ரோன்கள் உள்ளிட்ட பல ஏவுகணைகள், ஆளில்லா வான்வழி அமைப்புகள் உக்ரைனுக்கு வழங்கவும் பிரிட்டன் முடிவு செய்துள்ளது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Rishi Sunak gave home made barfi to President Zelenskyy: Ukraine President Zelenskyy tastes barfi.
Story first published: Monday, June 19, 2023, 15:05 [IST]

.

Previous Post

"செந்தில் பாலாஜியை நேரில் சென்று பார்க்காத தன்மானமிக்க ஒரே அமைச்சர் பிடிஆர்-தான்" – ஆர்.பி.உதயகுமார்

Next Post

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜியை நியமித்த அரசாணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜியை நியமித்த அரசாணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜியை நியமித்த அரசாணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In