அப்போது, ஆளுநராக இருந்தவர் விவசாயம், பதிவுத்துறை உள்ளிட்ட ஐந்து துறைகளை மட்டும் மூன்று அமைச்சர்களிடம் கொடுத்துவிட்டு, மற்றதை நான் கவனித்து கொள்கிறேன் என்று கூறி நிதித்துறை, நீதித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்டவற்றை அவர் வைத்துக்கொண்டார். ஆளுநர் ஒரு பகுதியிலும், சுப்பராயர் ஒரு பகுதியிலும் ஆட்சி செய்து கொண்டிருந்தனர். இதைத்தான் இரட்டை ஆட்சி முறை எனச் சொல்வார்கள்.
தற்போதைய ஆளுநர் இரட்டை ஆட்சி முறையைக் கொண்டு வர நினைக்கிறாரோ என நாங்கள் அச்சப்படுகிறோம். அம்பேத்கர் எழுதியிருக்கும் அரசியல் சட்டத்தில் அதற்கு இடம் இல்லை. அப்படி ஓர் எண்ணம் ஆளுநருக்கு இருக்கக் கூடாது. ஆளுநர்மீது தனிப்பட்ட முறையில் எந்தவிதக் காழ்ப்புணர்ச்சியும் எங்களுக்கு இல்லை.
