Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Junior Vikatan – 18 June 2023 – ஒன் பை டூ | discussion about seeman statement about melpathi village issue

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 14, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
Junior Vikatan - 18 June 2023 - ஒன் பை டூ | discussion about seeman statement about melpathi village issue
2
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சல்மா, செய்தித் தொடர்பாளர், தி.மு.க,

“சாதி ஆதிக்கத்துக்கு எதிராக, சமூகநீதிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் நிலைநிறுத்திய இயக்கம் தி.மு.க. சாதிய மனநிலையை இந்தச் சமூகத்திலிருந்து வேரறுக்க, சமத்துவபுரம் உள்ளிட்ட பல்வேறு முன்னோடித் திட்டங்களை ஏற்படுத்தி, சமூக மாற்றத்துக்கு வித்திட்ட நீண்ட வரலாற்றைக் கொண்டது தி.மு.கழகம். குறிப்பாக பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் பஞ்சாயத்துத் தலைவர்கள் பதவி, பட்டியல் சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்டதால், அங்கு உள்ளாட்சித் தேர்தலே நடந்த முடியாத சூழல் நிலவியபோது, வெற்றிகரமாகத் தேர்தலை நடத்தி, பட்டியல் சமூகத்தவர்களை அதிகாரப் பதவிகளில் அமரச்செய்ததும் தி.மு.க அரசுதான். ஆனால் இன்றைக்கு, சீமான் போன்றவர்கள் மாற்று அரசியல் என்கிற பெயரில், சாதிப் பெருமை பேசுவதையே குடிப்பெருமை என்று தங்களுக்கு வசதியாக அடையாளப்படுத்திக்கொண்டு, அதைவைத்தே அரசியலும் செய்துவருகிறார்கள். சீமான் போன்றவர்களின் இந்த இரட்டை வேடங்களை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மேல்பாதி விவகாரத்தில் இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்குள் சுமுகமான நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் அரசின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. தி.மு.க-வுக்கு சீமான் போன்றவர்கள் சமூகநீதி பாடம் எடுக்க முயல்வது வேடிக்கை.’’

சல்மா, இடும்பாவனம் கார்த்திக்

சல்மா, இடும்பாவனம் கார்த்திக்

இடும்பாவனம் கார்த்திக், இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நா.த.க

“சாதி வாக்குகளுக்கு பயந்து கோயிலைப் பூட்டுவதற்குப் பெயர் சமூகநீதி அல்ல, அப்பட்டமான ஏமாற்று வேலை. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று, அவர்களைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றால் கலவரம் ஏற்படும் எனப் பொய் பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுப் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். இன்னொரு பக்கம், அவர் தலைமையிலான அரசு பட்டியல் சமூகத்தினரின் வழிபாட்டு உரிமையை உறுதிசெய்யாமல், கோயிலைப் பூட்டுகிறது. இதையெல்லாம் எதிர்த்து கேட்டால், ‘நாம் தமிழர் சாதி பெருமை பேசுகிறது’ என்று பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். சாதியக் கட்சிகளுக்கு சீட்டு கொடுத்து, அவர்களை வளர்த்து விட்டதே தி.மு.க-தானே… `சமூகநீதி, சமூகநீதி’ என்கிறார்களே… ஆணவக்கொலை தனிச்சட்டம் இயற்ற ஏன் தயக்கம் காட்டுகிறது தி.மு.க. வேங்கைவயல் விவகாரத்தில் நடவடிக்கை எடுத்தார்களா… ஆறுதல் தெரிவிக்கவாவது அந்தப் பக்கம் சென்றாரா முதல்வர்… மேல்பாதியில், ‘பட்டியல் சமூகத்தினர் கோயிலுக்குள் வருவார்களேயானால், கோயிலை இழுத்துப் பூட்டு…’ என்பதுதான் அதை எதிர்க்கும் தரப்பின் வாதம். அதே நிலைப்பாட்டைத்தான் தி.மு.க-வும் எடுத்திருக்கிறது. ஆகவேதான் கேட்கிறோம், இதுதான் தி.மு.க-வின் சமூகநீதிக் கொள்கையா?’’

.

Tags: discussionissueJuneJuniormelpathiseemanstatementvikatanvillageஒனடப
Previous Post

Senthil Balaji Arrest: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது பின்னணி.. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

Next Post

செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் துணை ராணுவ படையினர் குவிப்பால் பரபரப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் துணை ராணுவ படையினர் குவிப்பால் பரபரப்பு

செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் துணை ராணுவ படையினர் குவிப்பால் பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In