Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home சமீபத்திய செய்திகள்

காவல் கண்காணிப்பாளர் Dr. L. பாலாஜி சரவணன் – குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உறுதிமொழி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 12, 2023
in சமீபத்திய செய்திகள், அரசியல் செய்திகள், டிரெண்டிங் செய்திகள்
0
காவல் கண்காணிப்பாளர் Dr. L. பாலாஜி சரவணன் – குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உறுதிமொழி
4
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தூத்துக்குடி – குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் இன்று ’குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் “ (Anti – Child Labour Day) உறுதிமொழி எடுக்கப்பட்டது.

ஜூன் 12ம் தேதி ‘குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளாக“ கொண்டாடப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததையடுத்து தமிழ்நாடு அரசு உறுதிமொழி குறித்து அரசாணை வெளியிட்டது. அதன்படி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு, இன்று (12.06.2023) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் காவல் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு ‘குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள்” உறுதிமொழி கீழ்கண்டவாறு எடுக்கப்பட்டது.

‘இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி ஏற்கிறேன்.” என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில் தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ், மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெயராம், மாவட்ட கட்டுபாட்டு அறை காவல் ஆய்வாளர் திரு. ரேனியஸ் ஜேசுபாதம், மாவட்ட ஆவண காப்பகப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. ஜெரால்டின் வினு உட்பட காவல்துறையினர் மற்றும் காவல்துறை அலுவலக அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரிகள் திரு. ராமசுப்பிரமணிய பெருமாள், திரு. குமார், அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர்கள் திரு. மாரியப்பன், திரு. மயில்குமார் திரு. ராபர்ட் உட்பட உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி – ஜெகதீஸ்வரி

Previous Post

500 பாண்டி சாராய பாட்டில்கள் பறிமுதல் – காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப

Next Post

10 கிலோ புள்ளிமான் மாமிசம் – ஒருவர் கைது – ஆறு பேருக்கு வலை வீச்சு.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
10 கிலோ புள்ளிமான் மாமிசம் – ஒருவர் கைது – ஆறு பேருக்கு வலை வீச்சு.

10 கிலோ புள்ளிமான் மாமிசம் - ஒருவர் கைது - ஆறு பேருக்கு வலை வீச்சு.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In