Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home சமீபத்திய செய்திகள்

10 கிலோ புள்ளிமான் மாமிசம் – ஒருவர் கைது – ஆறு பேருக்கு வலை வீச்சு.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 12, 2023
in சமீபத்திய செய்திகள், அரசியல் செய்திகள், டிரெண்டிங் செய்திகள்
0
10 கிலோ புள்ளிமான் மாமிசம் – ஒருவர் கைது – ஆறு பேருக்கு வலை வீச்சு.
25
SHARES
41
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

விருதுநகர் – ராஜபாளையத்தில் புள்ளிமானை வேட்டையாடி மாமிசத்தை விற்பனை செய்து கொண்டிருந்த ஆறு பேர் வனத்துறை அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓடினர். மான் இறைச்சியை விலைக்கு வாங்க சென்ற இளைஞரை கைது செய்த வனத்துறையினர், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிலோ மான் மாமிசம் மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட வனப் பகுதியில் இறைச்சிக்காக சட்டவிரோதமாக மான்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரகசிய தகவலின் பெயரில் மான் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக அறியப்பட்ட மேல ஆவாரம்பட்டி பகுதியில் வனச்சரக அலுவலர் சக்தி பிரசாத் கதிர்காமன், வனவர் இளவரசன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவரது வீட்டில் வைத்து மான் மாமிசம் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. வனத்துறையினர் ரோந்துக்கு வந்த தகவலை அறிந்த மாடசாமி மற்றும் கூட்டாளிகளான வடிவேல், அகிலேஷ் குமார் உள்ளிட்ட ஆறு பேர் அப்பகுதியில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.

அப்போது மான் மாமிசத்தை விலைக்கு வாங்குவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த காளிராஜ் என்ற 21 வயது இளைஞர் வந்துள்ளார். அவரை கைது செய்த காவல்துறையினர் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 10 கிலோ மான் இறைச்சி, வேட்டையாட பயன்படுத்தப்பட்ட அறிவாள், கத்தி, அரிவாள் மனை, உள்ளிட்ட ஆயுதங்களையும், மாமிசத்தை எடை போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

காளிராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தப்பி ஓடியவர்கள் வாழைகுளம் பீட் பகுதியில் இரவில் சட்டவிரோதமாக மான்களை தொடர்ந்து வேட்டையாடி, பகலில் மாமிசத்தை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காளிராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ள வனத்துறையினர் தப்பி ஓடிய ஆறு பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் சட்ட விரோதமாக மான் வேட்டையில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், வேட்டை நடப்பதாக சந்தேகப்படும் பகுதிகளில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தி – ஜெகதீஸ்வரி

Previous Post

காவல் கண்காணிப்பாளர் Dr. L. பாலாஜி சரவணன் – குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உறுதிமொழி

Next Post

மான் பாம்பை உண்ணுமா ?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மான் பாம்பை உண்ணுமா ?

மான் பாம்பை உண்ணுமா ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In