Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரண வழக்கு: தீராத சஸ்பென்ஸ்: பல VIP-க்கள் கண்காணிப்பில்…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 27, 2024
in Default
1
காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரண வழக்கு: தீராத சஸ்பென்ஸ்: பல VIP-க்கள் கண்காணிப்பில்…
11
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நெல்லை மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரண வழக்கில் 30-க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி போலீஸார், விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (60). நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த இவர் கடந்த 4ம் தேதி தனது வீட்டின் தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் கருகி இறந்து கிடந்தார்.

கொலை செய்யப்படுவதற்கு முன்பு ஜெயக்குமார் எழுதியிருந்த கடிதங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை

இந்நிலையில் நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் உத்தரவின்பேரில், இந்த கொலை வழக்கு தொடர்பாக 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில் ஜெயக்குமார் எழுதியதாக கைப்பற்றப்பட்ட கடிதத்தில் 30-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தாக போலீஸார் தரப்பில் தகவல்கள் வெளியாகின.

இவர்கள் அனைவருக்கும் சிபிசிஐடி போலீஸார், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். அதன்படி, சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயக்குமார் மரண வழக்கு விசாரணை

ஜெயக்குமார் மரண வழக்கு விசாரணை

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட ஜெயக்குமாரின் குடும்ப உறுப்பினர்களிடையே முதல்கட்ட விசாரணையை சிபிசிஐடி போலீஸார் முடித்திருக்கின்றனர். சிபிசிஐடி போலீஸார் இரண்டு குழுக்களாகப் பிரிந்து இந்த வழக்கை விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு குழு சிபிசிஐடி அலுவலகத்திலும், மற்றொரு குழு திசையன்விளை பகுதியிலும் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

மதுரை : ஆரப்பாளையம் கண்மாய் திருக்கோவில்களில் 64 ஆம் ஆண்டு உச்சவ விழா சிறப்பாக கொண்டாட்டம்.

Next Post

கோயிலில் உள்ளாடையுடன் செல்போனில் படம் பார்த்த போலீஸ்காரர்… வெளியான அதிர்ச்சி வீடியோ!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கோயிலில் உள்ளாடையுடன் செல்போனில் படம் பார்த்த போலீஸ்காரர்… வெளியான அதிர்ச்சி வீடியோ!

கோயிலில் உள்ளாடையுடன் செல்போனில் படம் பார்த்த போலீஸ்காரர்... வெளியான அதிர்ச்சி வீடியோ!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ஏற்கனவே சுமார் 25 வருடங்களாக திருச்செந்தூர் அருகே உள்ள மேலாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அன்னக்கிளி அம்மாள் என்பவர் கொலை வழக்கு சிபி சிஐடி வசம் தூங்கிக் கொண்டே இருக்கிறது. அதேபோன்று காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வழக்கை போடாமல் துரிதமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In