கோயிலில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற பகவத் கீதை நாடகத்தின் போது உள்ளாடை மட்டும் அணிந்து செல்போனில் போலீஸ்காரர் படம் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் கொலுஹகடா கிராமத்தில் சந்திரிகா மாதா கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்திலேயே கொலுஹாகாட் புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கோயிலில் பகவத் கீதை கதாகாலட்சபே நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.

சேரில் அரை நிர்வாணமாக அமர்ந்திருக்கும் ராம்நிவாஸ் யாதவ்
அப்போது காவல் நிலைய வராண்டாவில் அச்சல்கஞ்ச் புறக்காவல் நிலைய பொறுப்பாளரான ராம்நிவாஸ் யாதவ் என்ற போலீஸ்காரர் உள்ளாடை மட்டும் அணிந்து சேரில் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.
செல்போனில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் ராம்நிவாஸ், அரை நிர்வாண நிலையில் இருப்பதைக் கண்ட ஒருவர் அவரிடம், உடை அணியுமாறு கெஞ்சியுள்ளார். ஆனால், செல்போனில் கவனம் குவித்திருந்த ராம்நிவாஸ் யாதவ், அவர் சொன்னதை கண்டுகொள்ளவில்லை.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து போலீஸ்காரர் ராம்நிவாஸ் யாதவ் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் துறை கண்காணிப்பளார் சித்தார்த் சங்கர் மீனா உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பிகாபூர் சிஓ மாயா ராய்க்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்பேரில், கொலுஹாகாட் காவல் நிலைய பொறுப்பாளர் ராம்நிவாஸ் யாதவ், அச்சல்கஞ்ச் காவல் நிலையத்தில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். அதற்குப பதில் இன்ஸ்பெக்டர் வினய் மிஸ்ராவுக்கு புறக்காவல் நிலைய காவல் நிலைய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காலை 9 மணியளவில் ராம்நிவாஸ் யாதவ் குளிக்கச் சென்ற போது திடீரென மின்சாரம் பாய்ந்ததாலும், தண்ணீர் இல்லாததால் உள்ளாடையுடன் உட்கார நேரிட்டதாக போலீஸார் கூறினர்.

😄😄😄😄😄😄