`ஆளுநர் பேசும் சில அரசியல் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது’ – செல்லூர் ராஜூ

மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, “ஆளுநர் ஒரு கட்சியின் மாநில பிரதிநிதி போல பேசி வருகிறார். அவராக பேசுகிறாரா அல்லது அவரை யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா என தெரியவில்லை. அவர் பேசும் சில அரசியல் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரம் ஆளுநரை ஆளும்கட்சி விமர்சனம் செய்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளும்கட்சி – ஆளுநர் மோதல் காரணமாக தமிழக மக்கள் நல திட்டங்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும்’ என்றார். ஆளுநர் கருத்துகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பெரிதாக கருத்து சொல்லாமல் இருந்து வந்த நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ தனக்கே உரிய முறையில் பதில் அளித்திருக்கிறார்,


மக்கள் ஆணையத்திற்கு எனது வாழ்த்துக்கள்