Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வாடகை வீட்டில் வெளிமாநில மாடல் அழகிகள் – குறி வைத்துத் தூக்கிய காவல்துறை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 9, 2023
in அரசியல் செய்திகள்
0
வாடகை வீட்டில் வெளிமாநில மாடல் அழகிகள் – குறி வைத்துத் தூக்கிய காவல்துறை
22
SHARES
35
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

வீடு வாடகைக்கு எடுத்து வெளிமாநில அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வீடு கடை வாடகைக்கு எடுத்து வெளி மாநில அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்வதாக மாவட்ட காவல் ஆணையர் சரோஜ் குமார் தாக்கூருக்கு புகார் வந்துள்ளது. உடனே இது குறித்து நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பாகலூர் பகுதியில் அட்கோ காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தேன்கனிக்கோட்டை அஞ்சலகரியைச் சேர்ந்த சின்னபிட்டப்பவின் மகன் சீனிவாஸ், கிருஷ்ணகிரி பாரதி புரத்தைச் சேர்ந்த மாணிக்கத்தின் மகன் திருப்பதி, பெங்களூரு பண்டே பாலையா சின்னச்சாமி ஆகியோர் வீட்டு வாடகைக்கு எடுத்து வெளி மாநில அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்தது தெரிய வந்துள்ளது.

உடனே காவல்துறையினர் அந்த புரோக்கர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். இந்நிலையில் ஓசூர் அட்கோ காவல்துறையினர் நேற்றும் அதே பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியில் வெங்கட்ராமன் என்பவரது வீட்டில் அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாகக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெங்களூருவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், கேரள மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதான ஸ்ரீஜித், வீட்டின் உரிமையாளர் வெங்கட்ராமன் ஆகிய மூன்று பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.

அடுத்தடுத்த நாட்களில் பாலியல் தொழில் செய்தவர்கள் கைதான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.

Previous Post

பாரில் மதுபானம் விற்கப்படுவதாக புகார் – விசாரிக்க சென்ற காவலர்களை தாக்க முயன்ற திமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு

Next Post

`ஆளுநர் பேசும் சில அரசியல் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது’ – செல்லூர் ராஜூ

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamil News Live Today: `ஆளுநர் பேசும் சில அரசியல் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது’ - செல்லூர் ராஜூ | latest tamil news live updates dated on 09-06-2023

`ஆளுநர் பேசும் சில அரசியல் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது’ - செல்லூர் ராஜூ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In