பள்ளி மாணவர்களுக்கு இடையேயான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் நடைபெறவிருக்கிறது. இந்தப் போட்டியில் கலந்துக்கொள்ளும் மாணவர்களை அந்தந்த மாநில அரசு தேர்வு செய்து போட்டிக்கு அனுப்புகின்றன. ஆனால், அந்தப் போட்டியில் பங்குபெற வேண்டிய மாணவர்களை தமிழ்நாடு அரசு இன்னும் தேர்வு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,“டெல்லியில் நடைபெறவிருக்கும், பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழக அணி சார்பில் வீரர்களைத் தேர்வு செய்யாமல் இருப்பதால், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கேற்க இயலாமல் இருக்கின்றனர் என்ற நாளிதழ் செய்தி கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும், தேசிய அளவிலான போட்டிகள் என்பது கனவு. அந்தக் கனவை சீர்குலைத்திருக்கிறது திறனற்ற தி.மு.க அரசு.

