போதைப் பொருள்களின் ஆதாயத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் ஒரு குடும்பத்தை மக்கள் நிராகரிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெலுங்கில் பேசி, ஓசூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே ராம்நகரில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர், நரசிம்மனை ஆதரித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். தெலுங்கு மொழியில் பேச வேண்டுமென வேட்பாளர் கேட்டுக்கொண்டதின் பேரில், தெலுங்கில் ஆரம்பித்தவர் தடுமாறியதால் மீண்டும் தமிழில் பேசினார்.
அவர் பேசும் போது, “மழைக்கால, குளிர்க்கால பறவை போல மோடி வருவதாக முதல்வர் விமர்சிக்கிறார். அந்த வார்த்தையே தவறு. இந்திய நாட்டில் யார் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஒவ்வொருமுறை தமிழ்நாட்டிற்கு பிரதமர் வந்தபோது பல கோடி ரூபாய் திட்டங்களை கொடுத்து சென்றுள்ளார். தொழில்களை அவர் கொடுத்து சென்றால் கமிஷன் பெறுவதற்காக இவர்கள் வருகிறார்கள்” என்றார்.

நிர்மலா சீதாராமன் பிரச்சாரம்
மேலும், “ குடிப்பழக்கத்தால் ஒவ்வொரு குடும்பமும் எவ்வளவு கஷ்டப்படுகிறது என்பதை பாரக்கிறோம். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் தொழில் கொடுத்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் அவர்களின் ஒரு குடும்பம் வாழ வேண்டுமென்பதற்காக போதை பொருட்களை இறக்குமதி செய்து இளைஞர்களை பாழாக்குகின்றனர். அந்த குடும்பத்தை மீண்டும் ஒருமுறை கூட தேர்ந்தெடுக்க கூடாது” என்றார்.

கிருஷணகிரி பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரச்சாரம்
தொடர்ந்து பேசிய அவர், “ ஜாபர் சாதிக், அந்த குடும்பத்துடன் நேரடி தொடர்பில் இருந்தார் என்பதற்கு ஏராளமான ஆதாரம் உள்ளன. நாடு நல்லா இருக்க வேண்டுமானால், ஊழல் இல்லாத அரசும், அரசியல்வாதியும் அமைய வேண்டும். அது நம் பிரதமர் மோடியை போல இருக்க வேண்டும்.” என்று அவர் பேசினார்

எந்த மொழியில் பேசி ஏமாற்றினாலும் பிஜேபி கட்சிக்கு மக்கள் ஓட்டு போட போவது இல்லை