தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரத்தில் போட்டியிடுகிறது. தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்கக்கோரி அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் தேர்தல் கமிஷனை நாடி நார். இந்த விண்ணப்பம் கடந்த 20.2.2024 அன்று அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தேர்தல் கமிஷனுக்கு இதுகுறித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி சச்சின் தத்தா விசாரித்து, இதுகுறித்து உடனடியாக முடிவு எடுத்து அறிவிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது. ஆனால் பானை சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மீண்டும் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் அரசியல் பரபரப்பான சூழலில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் போட்டியிடும் சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் திருமாவளவனுக்கும் ரவிக்குமாருக்கும் பானை சின்னத்தை ஒதுக்கியதுதாள் தேர்தல் ஆணையம் இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூங்கில்துறை பட்டியல் சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வேலு மற்றும் திருப்பதி தலைமையில் அக்கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்து வருகின்றனர் மேலும் மறுபடியும் விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு பானை சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்துக்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் நன்றி தெரிவித்துவருகின்றனர்வருகின்றனர்.

கமெண்ட்ஸ் செய்ய விரும்பவில்லை