போராடும் விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர் ஹரியானா காவல்துறையினர்.
மீண்டும் அரியானா டெல்லி எல்லையில் பரபரப்பு நிலவி வருகிறது. காலையிலிருந்து தொடர்ச்சியாக கண்ணீர் வெடிகுண்டுகளும் ரப்பர் புல்லட்டுக்களும் சுட்ட வண்ணம் உள்ளனர்.
பஞ்சாப் – ஹரியானா எல்லையில் நெடுஞ்சாலையின் நடுவே உள்ள இடத்தில் வெங்காயத்தை பயிரிட்டு விவசாயிகள் தங்க எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
ஹரியானா காவல்துறையினரின் கண்ணீர் புகை குண்டு வீச்சு தாக்குதலில் காயமடைந்த விவசாயிகளுக்கு அங்கேயே மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
காயமடைந்த சிலர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், எத்தனை பேர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை.
