சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் குமரகுரு தாசர் கோவிலை நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தனியார் தொலைக்காட்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பேட்டி எடுத்த ஊடகவியலாளரை பச்சையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். குறிப்பாக “பார்த்து பல்லு படாம”என ஊடகவியாளரின் கேள்விகளை விமர்சனம் செய்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார். அதனை ரீட்வீட் செய்த பாஜக ஆதரவாளர் எஸ்.வி சேகர் “பிட்டு வீடியோ எடுக்குறதுக்கு முன்னாடி சொல்லி சொல்லி அதே ஞாபகத்துல இந்த மீடியா கேமராவைப்பாத்து பேசிட்டாப்புல. Filthy month & mind. அரசியலில் ஒரு அவமானம். Shame” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்துள்ளார்.

விஐபிக்களை பேட்டி காணும் போது என்ன கேள்வி கேட்க போகிறோம் என்பதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்பது இதழியல் மரபு. அதை “பல்லுபடாம” என்பது ஆபாசம். அண்ணாமலையின் கமென்டை போல அவரை பற்றிய அசிங்கங்கள் அதிமுகவில் இணைந்துள்ள காயத்ரி ரகுராமால் வெளிவர போகிறது என்றும் சில நேட்டீசன்கள் கூறி வருகின்றனர்.

