மறைந்த தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது.
இது தொடர்பான வழக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு வழக்கு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவருடைய தோழி சசிகலா இன்று கோடநாடு பங்களாவில் தங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக அவர் சென்னையில் இருந்து கோடநாடு புறப்பட்டு உள்ளதாகவும் இன்று அவர் அந்த பங்களாவில் குறைந்தது 3 நாட்கள் தங்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

