
சிவகங்கை: சிவகங்கை நகரில் பணம் கேட்டும், வாங்கிய பொருட்களுக்கு பணம் தராமலும் கடைகளில் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் பலசரக்கு கடை நடத்தி வருபவர் மனோபாலா. இவரது கடைக்கு வந்த டி.புதூரைச் சேர்ந்த அழகுபாண்டி மது அருந்த பணம் கேட்டுள்ளார். பணம் தர மனோபாலா மறுத்தார். இதையடுத்து அழகுபாண்டி, தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து மனோபாலாவை அரிவா ளால் வெட்டிவிட்டு தப்பினார். இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

