ஜனவரி 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா பயணம் மேற்கொள்கிறார். அதன் பிறகு, அமெரிக்கா செல்கிறார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் 2 நாட்கள் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் 50 நாடுகளைச் சோ்ந்த தொழில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்துக்காக 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
மேலும் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் இலக்கு நிா்ணயித்துள்ளாா். இந்த முதலீடுகள் மூலம், நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில், 14. லட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கும், மறைமுக வேலைவாய்ப்பு எண்ற வகையில், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும் என மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக முதலீடுகளை ஈர்க்க அண்மையில் ஜப்பான், சிங்கப்பூர், ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் 28 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் செல்ல இருக்கிறார். மேலும் இந்தாண்டு ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் செல்ல திட்டமிட்டிருக்கிறார்.

