Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பொன்முடி மீண்டும் அமைச்சராக வேண்டி 108 பால்குடம் எடுத்த திமுகவினர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 26, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பொன்முடி மீண்டும் அமைச்சராக வேண்டி 108 பால்குடம் எடுத்த திமுகவினர்!
60
SHARES
96
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பதவியை இழந்துள்ள பொன்முடி மீண்டும் அமைச்சராக வேண்டி கோயிலுக்கு திமுக பெண் தொண்டர்கள் 108 பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக பொறுப்பு வகித்த பொன்முடி, வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி மீதும் கடந்த 2011ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் இருவரையும் விடுதலை செய்திருந்த நிலையில், அடுத்து வந்த, அதிமுக ஆட்சியில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் உச்ச நீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்து வழக்கிற்கு மீண்டும் உயிரூட்டினார்.

108 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து வழிபாடு

108 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து வழிபாடு

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சமீபத்தில், பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவி ஆகிய இரு பதவிகளையும் பொன்முடி இழந்துள்ளார். ஒரு மாத காலத்திற்குள் அவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டுமென உயர் நீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது.

சித்தலிங்கமடம் ஒன்றிய கவுன்சிலர் உமா மகேஸ்வரி, சதீஷ்குமார் தலைமையில் பாலாபிஷேகம்

சித்தலிங்கமடம் ஒன்றிய கவுன்சிலர் உமா மகேஸ்வரி, சதீஷ்குமார் தலைமையில் பாலாபிஷேகம்

இந்த நிலையில் பொன்முடி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க வேண்டி விழுப்புரத்தில் திமுக பெண் தொண்டர்கள் பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். விழுப்புரம் அருகே சித்தலிங்கமடம் ஊராட்சியின் ஒன்றிய கவுன்சிலராக உள்ள உமா மகேஸ்வரி, அவரது கணவர் சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் திமுக பெண் தொண்டர்கள், 108 பால்குடம் எடுத்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

ஊர்வலமாக பால் குடம் எடுத்து வந்த அவர்கள், நேற்று விசாலாட்சி சமேத வியாக்ரபாதீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதன் பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Previous Post

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான குளிர்கால சிறப்புப் பயிற்சி முகாம்.

Next Post

பாகிஸ்தான் பேச தயாராக உள்ளதால் பேச்சுவார்த்தை நடத்துங்கள்; இல்லையென்றால் காஸா நிலைதான்! – ஃபரூக் பரபரப்பு கமெண்ட்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாகிஸ்தான் பேச தயாராக உள்ளதால் பேச்சுவார்த்தை நடத்துங்கள்; இல்லையென்றால் காஸா நிலைதான்! – ஃபரூக் பரபரப்பு கமெண்ட்..!

பாகிஸ்தான் பேச தயாராக உள்ளதால் பேச்சுவார்த்தை நடத்துங்கள்; இல்லையென்றால் காஸா நிலைதான்! - ஃபரூக் பரபரப்பு கமெண்ட்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In