பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால், காஸா மற்றும் பாலஸ்தீனம் நிலை இந்தியாவிலும் ஏற்படக் கூடும் என தேசிய மாநாட்டு கட்சி எம்பி-யும், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஃபரூக் அப்துல்லா
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு இன்று ஃபரூக் அப்துல்லா அளித்த பேட்டியில், ‘நமது நண்பர்களை மாற்ற முடியும், ஆனால் அண்டை நாடுகளை மாற்ற முடியாது’ என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார். நாம் நமது அண்டை நாடுகளுடன் நட்பாக இருந்தால், இரு நாடுகளும் முன்னேற முடியும். ‘போர் தேவையில்லை. பிரச்சினைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும்’ என பிரதமர் நரேந்திர மோடியும் கூறியிருந்தார்.
அந்த பேச்சுவார்த்தை என்ன ஆனது? நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமராகப் போகிறார்.
‘நாங்கள் இந்தியாவுடன் பேசத் தயாராக இருக்கிறோம்’ என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கின்றனர். ஆனால் நாம் பேசத் தயாராக இல்லாததற்கு என்ன காரணம்? பேச்சுவார்த்தையின் மூலம் நாம் ஒரு தீர்வை கண்டறியாவிட்டால், இஸ்ரேலால் குண்டுவீசப்படும் காஸா மற்றும் பாலஸ்தீனத்தின் நிலையை நாமும் சந்திக்க நேரிடும்” என்றார்.
காஸாவின் நிலை இந்தியாவிலும் ஏற்படும் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

