Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home டிரெண்டிங் செய்திகள்

பர்சனல் லோன் வாங்க சிறந்த வங்கி எது.. எங்கு வட்டி குறைவு.. எது பெஸ்ட்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2023
in டிரெண்டிங் செய்திகள்
0
பர்சனல் லோன் வாங்க சிறந்த வங்கி எது.. எங்கு வட்டி குறைவு.. எது பெஸ்ட்?
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Loan: வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் என போட்டி போட்டுக் பல்வேறு வகையான கடன்களை வழங்குகின்றன. எனினும் பெரும்பாலான சம்பளதாரர்கள் அணுகுவது பர்சனல் லோன் எனும் தனி நபர் கடன் தான்.

ஏனெனில் இதனை எளிதில் பெற முடியும். மற்ற கடன்களை காட்டிலும் ஆவணங்கள் குறைவு, என பல்வேறு விதமான நல்ல விஷயங்கள் உள்ளன. எனினும் மற்ற கடன்களை காட்டிலும் இதில் வட்டி அதிகம்.

 பர்சனல் லோன் வாங்க சிறந்த வங்கி எது.. எங்கு வட்டி குறைவு.. எது பெஸ்ட்?

இன்றைய காலக்கட்டத்தில் பலரும் வீட்டுக் கடன் என பல்வேறு வகையான கடனுக்கு பதிலாக இந்த பர்சனல் லோன் எனும் தனி நபர் கடன்களையே நாடுவதை காண முடிகின்றது. ஆக இந்த பர்சனல் லோன் கொடுக்கும் டாப் 10 வங்கிகள் என்னென்ன? வட்டி விகிதம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

ஹெச் டி எஃப் சி வங்கி டாப் லிஸ்டில் முதலாவதாக உள்ளது. ஹெச் டி எஃப் சி வங்கியினை பொறுத்த வரையில் வட்டி விகிதம் வருடத்திற்கு 10.50 – 21% வரையில் உள்ளது. இவ்வங்கியில் 12 – 60 மாதங்களில் கடனை திரும்ப செலுத்த வேண்டும். 15 லட்சம் ரூபாய் வரையில் கடன் கிடைக்கும்.

இரண்டாவது இடத்தில் டர்போ லோன்: சோழமண்டலம் பைனான்ஸில் வழங்கப்படுகிறது. இங்கு வருடத்திற்கு வட்டி விகிதம் 15% ஆக உள்ளது. இதில் 5 லட்சம் ரூபாய் வரையில் கடன் பெறலாம். இதனை 12 – 48 மாதங்களில் திரும்ப செலுத்தலாம்.

ஹேப்பி நியூஸ்.. ஹெச்டிஎஃப்சி வங்கி நிகர லாபம் ரூ.12,047 கோடி.. டிவிடெண்டும் அறிவிப்பு!

மூன்றாவது இடத்தில் உள்ள எஸ்பிஐ-யில் இரண்டு வகையான பர்சனல் லோன் உண்டு. ஒன்று எஸ்பிஐ எக்ஸ்பிரஸ் கிரெடிட் கடனிற்கு – 10.60% வட்டி ஆரம்பமாகிறது. இதில் வயது வரம்பு – 21 – 60 வயதாகும். கடன் வரம்பு – ரூ.25,000 முதல் 20 லட்சம் ரூபாய் வரையில் பெறலாம்.
கால அவகாசம் – 60 மாதம் வரையில் கிடைக்கிறது.

எஸ்பிஐ பர்சனல் லோன் /ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் வட்டி விகிதம் வருடத்திற்கு – 9.75% – 10.25% . இதில் வயது வரம்பு – 21 – 76 வயது வரையில் வாங்கிக் கொள்ளலாம். இங்கு கடன் – ரூ.25,000 – 14 லட்சம் ரூபாய் வரை பெறலாம். கால அவகாசம் – 84 மாதங்கள் வரையில் கட்டலாம்

4வது இடத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் வட்டி விகிதம் வருடத்திற்கு – 8.7% – 14.25% வரையில் உள்ளது. இங்கு வயது வரம்பு – 21 – 60 வயது ஆகும். வருமானம் – வங்கி விதிமுறைகளை பொறுத்தது. கடன் அளவு ரூ.50,000 – ரூ.10 லட்சம் அல்லது வருமானத்தில் 20 மடங்கு.

அடுத்த இடத்தில் உள்ள ஆக்ஸிஸ் வங்கியில் வட்டி விகிதம் வருடத்திற்கு – 12% – 21%. இதில்
வயது வரம்பு – 21 – 60 வயது. குறைந்தபட்ச வருமானம் – ரூ.15,000. கடன் அளவு – ரூ.50,000 முதல் 15 லட்சம் ரூபாய் வரையில் கிடைக்கலாம். திரும்ப செலுத்தும் கால அவகாசம் என்பது 12 – 60 மாதங்கள் வழங்கப்படுகிறது.

 பர்சனல் லோன் வாங்க சிறந்த வங்கி எது.. எங்கு வட்டி குறைவு.. எது பெஸ்ட்?

கனரா வங்கியினை பொறுத்த வரையில் இரு வகையாக கடன் வழங்கப்படுகிறது.

கனரா வங்கி டீச்சர்ஸ் பர்சனல் லோனுக்கு வட்டி விகிதம் வருடத்திற்கு – 12.40%.
வயது வரம்பு – 21 – 60 வயது. குறைந்தபட்ச வருமானம் – ரூ.10,000.
கடன் அளவு – ரூ. 3 லட்சம் ரூபாய் அல்லது 10 மாதங்களுக்கான மொத்த சம்பளத்தில் எது குறைவோ அது. இதனை 48 மாதங்களுக்கு திரும்ப செலுத்த வேண்டும்.

இரண்டாவது கனரா வங்கியின் பட்ஜெட் பர்சனல் லோன். இதில் வட்டி விகிதம் வருடத்திற்கு – 11.30 – 12.30% ஆகும். இதில் வயது வரம்பு என்பது வங்கியின் விருப்பமாகும். இதேபோல
குறைந்தபட்ச வருமானமும் கங்கியின் விருப்பப்படியே. இங்கு கடன் அளவு – ரூ. 3 லட்சம் ரூபாய் அல்லது 6 மாதங்களுக்கான மொத்த சம்பளத்தில் எது குறைவோ அதனை பெறலாம். இதனை திரும்ப செலுத்தும் கால அவகாசம் 60 மாதங்கள் வரை உண்டு.

நிதி நிறுவனமான மஹிந்திரா பைனான்ஸில் வட்டி விகிதம் வருடத்திற்கு – 26% வரையில் உள்ளது. இங்கு வயது வரம்பு – 21 – 58 வயது வரை ஆகும். இங்கு கடன் அளவு – ரூ.3 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதனை திரும்ப செலுத்த கடன் கால அளவு – 3 வருடங்கள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது.

 பர்சனல் லோன் வாங்க சிறந்த வங்கி எது.. எங்கு வட்டி குறைவு.. எது பெஸ்ட்?

அடுத்த இடத்தில் உள்ள ஐடிபிஐ வங்கியில் வட்டி விகிதம் வருடத்திற்கு – 8.15 – 10.9.% வரையில் வசூலிக்கப்படுகிறது. இங்கும் வயது வரம்பு – 21 – 60 வயது வரை உள்ளது. குறைந்தபட்ச வருமானம் – ரூ.15,000 ஆகும். இங்கு கடன் அளவு – ரூ. 3 லட்சம் வரையிலும், திரும்ப செலுத்தும் கால அளவு 3 வருடங்கள் வரையிலும் வழங்கப்படுகிறது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வட்டி விகிதம் வருடத்திற்கு – 10.80%ல் ஆரம்பமாகிறது. இதில்
வயது வரம்பு – 21 – 60 வயது வரையில் உள்ளது. இங்கு குறைந்தபட்ச வருமானம் – ரூ.5,000-க்கு மேல். கடன் ரூ.5 லட்சம் வரை கிடைக்கும். திரும்ப செலுத்த 60 மாதம் வரை அவகாசம் கிடைக்கும்.

.

Tags: banksIndialendingloanNBFCspersonalproviderTopஎஙகஎத.கறவ.சறநதபரசனலபஸடலனவஙகவடட
Previous Post

காற்று மாசுக்கு குட்பை சொல்லும் உ.பி! நாட்டிற்கே முன் மாதிரியாக இருக்கும் என முதல்வர் யோகி பெருமிதம்

Next Post

ஓய்வுகால முதலீட்டுக்கு ஏற்றது எது.. PPF Vs NPS வரை.. கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஓய்வுகால முதலீட்டுக்கு ஏற்றது எது.. PPF Vs NPS வரை.. கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன?

ஓய்வுகால முதலீட்டுக்கு ஏற்றது எது.. PPF Vs NPS வரை.. கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In