பேரவையில் நிறைவேற்றி அனுப்பி நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நிலுவையில் இருந்த 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு மீண்டும் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ரவி.
ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள மசோதாக்களை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிவைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் தெரிய வருகிறது.
நவம்பர் 18ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்.
10 மசோதாவில்,8-9 மசோதாக்கள்,தமிழகத்திலுள்ள வெவ்வேறு பல்கலைக்கழகங்களுக்கு, துணைவேந்தர் நியமனத்தை கவர்னர் பதிலாக முதலமைச்சர் பொறுப்பில் விடுவதற்கு கேட்டு அனுப்பப்பட்டவை ஆகும். இதனை தொடர்ந்து வரும் 18ஆம் தேதி சனிக்கிழமை சிறப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்படும் என்று சபாநாயகர் இன்று கூறியுள்ளார்.
அரசியலமைப்பு சட்டத்தின் படி இந்த மசோதாக்களை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் அதற்க்கு ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும் என்று நேட்டீசங்கள் கூறி வருகின்றனர். பொறுத்திருந்து பார்போம்.

