Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மதத்தை வைத்து வாக்கு சேகரிக்கும் பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா மீது நடவடிக்கை தேவை – உத்தவ் தாக்கரே காட்டம்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 16, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மதத்தை வைத்து வாக்கு சேகரிக்கும் பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா மீது நடவடிக்கை தேவை – உத்தவ் தாக்கரே காட்டம்..!
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
Uddhav Thackeray

உத்தவ் தாக்கரே

தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.

230 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நாளை(நவ. 17) ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மதத்தை வைத்து வாக்கு சேகரிக்கும் பாஜகவினர் மீது குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் சிவசேனை தலைவருமான உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘பாஜகவுக்கு வாக்களித்தால் அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவச பயண சேவை’ என்று கூறி வாக்கு சேகரித்தார். அதுபோல கர்நாடகத் தேர்தலின்போது வாக்கு சேகரித்த பிரதமர் மோடி, ‘நீங்கள் வாக்களிக்கும்போது அனுமன் பெயரைக் கூறுங்கள்’ என்றார்.

இவ்வாறு பாஜகவினருக்காக தேர்தல் நடைமுறை விதிகளை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளதா? என்றும் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ‘ராமர் கோயிலுக்கு இலவச பயண சேவை என்றால் ஏன் மத்தியப் பிரதேச மக்களுக்கு மட்டும்? ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள மக்களுக்கும் வழங்கலாமே? அமித் ஷாவுக்கு தெரியும் அவர்கள் எதுவுமே செய்யவில்லை என்று. எனவேதான் ராமரை வைத்து வாக்கு கேட்கிறார்கள்’ என்றார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த இரட்டை நிலைப்பாடு குறித்து சிவசேனை எம்.பி. அனில் தேசாய், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

.

Previous Post

அள்ள அள்ள ஐநூறு ரூபாய் நோட்டு.. தொக்காய் சிக்கிய பாஜக வேட்பாளர்! சத்தீஸ்கரில் சலசலப்பு..!

Next Post

தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கின் நீட்சி..! – நிலுவையில் இருந்த 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கின் நீட்சி..! –  நிலுவையில் இருந்த 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி..!

தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கின் நீட்சி..! - நிலுவையில் இருந்த 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In