தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத்தலைவர் பெ. ஜான்பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது..
“தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மண்டல செயலாளராக பணியாற்றி வந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுதூர் அ.சி. கோபாலகிருஷ்ணன் ஆகிய தாங்கள் மேற்படி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளராக இன்று முதல் 15 .11.2023 கட்சியின் பணியாற்ற நியமனம் செய்யப்படுகிறீர்கள்.
தங்களது செயல்பாடுகள் கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். கட்சியின் அனைத்து நிர்வாகிகளோடும் இணைந்து திறம்பட கட்சி பணியாற்ற தங்களை வாழ்த்துகின்றோம் என்று புதிய பொறுப்பாளர் நியமன கடிதத்தை கட்சியின் நிறுவனத்தலைவர் பெ. ஜான்பாண்டியன் சிறுதூர் அ.சி. கோபாலகிருஷ்ணனிடம் வழங்கினார்.



