இந்தோனேசியாவில் நிலக்கரியை வாங்கும் அதானி இந்தியாவிற்கு அதனை கொண்டு வரும் பொழுது அதன் விலையை இரண்டு மடங்காக உயர்த்துவதாகவும் அதன் மூலமாக மின்சார கட்டண உயர்வை ஏற்படுத்துவதாகவும், ஏழை மக்களுடைய சட்டைப்பையிலிருந்து நேரடியாக அதானி எடுப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குட்டம் சாட்டியுள்ளார்.
இந்தியாவில் நிலக்கரி ஒதுக்கீடு மற்றும் மின்சார கட்டண உயர்வு ஆகியவற்றின் மூலமாக 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறை கேடு நடந்திருப்பதாகவும் இதன் பின்னணியில் அதானி இருப்பதாகவும் லண்டனில் இருந்து வெளியாகும் பினான்சியல் டைம்ஸ் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.
அதானி மீது பிரதமர் நரேந்திர மோடி இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருப்பதாகவும் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்..

