சென்னை அருகே உள்ள மணலி மாத்தூரில் வீட்டில் கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் ஆல் அவுட் திரவத்தை எடுத்து குடித்த இரண்டு வயது குழந்தை லட்சுமி உயிரிழந்துள்ளது.
ஸ்விட்ச் போர்டில் இருந்த கொசு விரட்டியை குழந்தை எடுத்து உறிஞ்சுவதை பார்த்த தாய் நந்தினி, மருத்துவமனைக்கு அழைத்த சென்றுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.

