Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அதிர்ச்சி… தமிழக அரசு உத்தரவால் நிலம், குடியிருப்பு விலை உயர வாய்ப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 25, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அதிர்ச்சி... தமிழக அரசு உத்தரவால் நிலம், குடியிருப்பு விலை உயர வாய்ப்பு!
38
SHARES
61
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழகத்தில் உள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பை நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் நிலம் மற்றும் குடியிருப்புகளின் விலை உயர வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக, பதிவுத் துறைதலைவர் அலுவலகத்தில் இருந்து அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், அனைத்து மாவட்ட பதிவாளர்கள், சார் பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், தமிழகத்தில் வழிகாட்டி மதிப்புகள் விவசாய நிலங்களுக்கு ஏக்கரிலும், மனை நிலங்களுக்கு சதுரஅடியிலும் நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் பெரும்பாலான இடங்களில் வெளிச்சந்தை மதிப்பைவிட மிகமிகக் குறைவாக உள்ளன.

வங்கிகள் வழிகாட்டி மதிப்பையொட்டியே கடன் வழங்கும். இதனால் மனை நிலம் வாங்குவோர் வங்கிகளில் தேவையான அளவுக்கு கடன் பெற முடியாத நிலை உள்ளது. இதைத் தவிர்க்கவும் வழிகாட்டியில் குறைந்தபட்ச மதிப்பை நிர்ணயிக்கவும் ஆக.16-ம் தேதி மைய மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நடத்தப்பட்ட விவாதத்துக்குப்பின் குறைந்தபட்ச மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறைந்தபட்ச குடியிருப்பு மதிப்பை பொறுத்தவரை சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சியில் சதுரஅடி ரூ.1000, ஆவடி, தாம்பரம், ஓசூர் மற்றம் காஞ்சிபுரம் மாநகராட்சிகளில் சதுரஅடி ரூ.800, ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோவில் மாநகராட்சிகளில் சதுரஅடி ரூ.700, திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர், கரூர் மாநகராட்சிகளில் சதுரஅடி ரூ.600, தூத்துக்குடி, தஞ்சாவூர், சிவகாசி, கும்பகோணம் மாநகராட்சிகளில் சதுரஅடி ரூ.500, கடலூர் மாநகராட்சியில் சதுரஅடி ரூ.400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், நகராட்சிப் பகுதிகளில் அமைந்துள்ள மனைகளுக்கு சதுரஅடி ரூ.300, அனைத்து பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள தெருக்களுக்கு குறைந்தபட்ச மதிப்பு சதுரஅடி ரூ.200 என்று நி்ர்ணயிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், மதுரை, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும் மற்றும் இம்மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளில் உள்ள புல எண்களுக்கான குறைந்தபட்ச மதிப்பு குடியிருப்புகளுக்கு சதுரஅடி ரூ.100-ம், விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.5 லட்சம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இதர மாவட்டங்களில் உள்ள கிராமங்கள், இம்மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளில் உள்ள புல எண்களுக்கான குறைந்தபட்ச மதிப்பு குடியிருப்புகளுக்கு சதுரஅடி ரூ.50, விவசாய நிலங்களுக்கு ஏக்கர் ரூ.2 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட மதிப்புகள் இணையதளத்தில் நேரடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய குறைந்தபட்ச மதிப்புக்கு கீழ் வேறு மதிப்புகள் ஏதும் உள்ளனவா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, தமிழக பதிவுத் துறையானது பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வையை 11 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைத்தாலும், வழிகாட்டி மதிப்பில்குறைக்கப்பட்டிருந்த 33 சதவீதத்தை மீண்டும் உயர்த்தியது. இதனால், வீடு, நிலம் வாங்குவோருக்கு கூடுதல் செலவுகள் ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து, அடுக்குமாடி கட்டிடம் வாங்குவோருக்கான பதிவு விதிகளில் திருத்தம் செய்து, கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளை வாங்குவோர் அதன் முழு பரப்புக்கும் கணக்கிட்டு அதனைப் பொறுத்து 9 சதவீதம் முத்திரைத் தீர்வை, பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும் என்றுஅறிவுறுத்தியது. இதன் காரணமாக வீடு வாங்குவோர் கூடுதல் தொகை செலுத்த வேண்டியதுள்ளது.

இந்நிலையில், குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பை நிர்ணயித்துள்ளதால், மனைகளின் சந்தை மதிப்பு உயரும் என்று பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

.

Tags: அதரசசஅரசஉததரவலஉயரகடயரபபதமழகநலமவயபபவல
Previous Post

நதிநீர் பங்கீடு | காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

Next Post

அதிர்ச்சி… அரசு பள்ளியில் மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்ட மாணவி! கண்டுக்கொள்ளாத அரசு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிர்ச்சி... அரசு பள்ளியில் மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்ட மாணவி! கண்டுக்கொள்ளாத அரசு!

அதிர்ச்சி... அரசு பள்ளியில் மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்ட மாணவி! கண்டுக்கொள்ளாத அரசு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In