நடிகை அஞ்சலி, லிப் லாக் காட்சியில் நடிப்பது குறித்து பேசினார்.
கற்றது தமிழ் படத்தின் மூலம் அஞ்சலி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தை ராம் இயக்கியிருந்தார். பின்னர் அங்காடி தெரு, எங்கே எப்போதும் போன்ற பல வெற்றிப் படங்களில் கதாநாயகியானார். அஞ்சலி கதாநாயகியாக மட்டுமின்றி துணை நடிகையாகவும் புகழ் பெற்றவர். நடிப்பு மட்டுமின்றி ஐட்டம் நடனத்திலும் வெற்றி பெற்றுள்ளார் அஞ்சலி.
நடிகை அஞ்சலி முத்தக்காட்சியில் நடிப்பது குறித்து சமீபத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், “எனக்கு நெருக்கமான காட்சிகளை படமாக்குவது மிகவும் கடினம். என் கம்ஃபர்ட் சோன் எவ்வளவு என்று தெரியவில்லை. முத்தக் காட்சிகளின் போது கேரவனுக்கு ஓடிவிடுவேன். அங்கேயே உட்கார்ந்து நீண்ட நேரம் அழுதுவிட்டு மீண்டும் ஷாட்டுக்கு வருவேன். ஆனால் லிப் லாக் காட்சியைப் பற்றி கவலைப்படவில்லை.
லிப் லாக் காட்சிக்கு வரும்போது ஒரு வரம்புக்கு மேல் போக கூடாது என்று எனக்கு தெரியும். பலர் முன்னிலையில் நடிப்பது பிரச்னை. படக்குழு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் குறைந்தது பதினைந்து பேராவது படப்பிடிப்பில் இருப்பார்கள்.” என்றார்.
முன்னதாக இருந்த காதல் பற்றி அஞ்சலி பேசுகையில், “நான் ஒரு நச்சு உறவில் இருந்தேன். நான் யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனா, நான் நினைச்ச அளவுக்கு நல்லா அமையல. ஒரு பெண் தனக்கு உறவு வேண்டுமா அல்லது தொழில் வேண்டுமா என்று யோசிக்க வேண்டும்.
ஒரு ஆணுக்கு திருமணம் முடிந்து தொடர்ந்து வேலை செய்ய முடிந்தால் பெண்ணாலும் முடியும்” என்றார்.

