Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`வீட்டு உரிமையாளர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்பு என்ன?' – சட்டம் சொல்வது என்ன? – 8

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 29, 2026
in அரசியல் செய்திகள்
0
`வீட்டு உரிமையாளர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்பு என்ன?' – சட்டம் சொல்வது என்ன? – 8
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“சட்டம் சொல்வது என்ன?” 6-வது பகுதியில், வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர்களின் உரிமைகள் என்னவென்று எழுதியிருந்தோம். இந்தப் பகுதியில், வீட்டின் உரிமையாளருக்கான சட்டவிதிகள் என்ன சொல்கின்றன என்பதைப் பார்ப்போம்.

எந்தெந்தச் சூழ்நிலைகளில் வீட்டைக் காலி செய்யச் சொல்லலாம்?

தமிழ்நாடு வாடகைதாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை ஒழுங்குபடுத்தும் சட்டம், 2017-ன் பிரிவு 21 இதற்கான விதிகளைச் சொல்கிறது.

1. வாடகை பாக்கி வைத்திருந்தால்! — பிரிவு 21(2)(b)

இரண்டு மாதங்களுக்கான வாடகை மற்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிற கட்டணங்களைச் செலுத்தாமல் பாக்கி வைத்திருக்கிறீர்களா? உரிய முறையில் கோரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்ட பிறகும், ஒரு மாதத்துக்குள் முழுப் பாக்கியையும் செலுத்தவில்லை என்றால், வீட்டு உரிமையாளர் Rent Court-ஐ அணுகி வீட்டைக் காலி செய்வதற்கான உத்தரவைக் கோரலாம். ஆனால், சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அந்தக் காலக்கெடுவுக்குள் முழுப் பாக்கியையும் செலுத்தினால் அல்லது Rent Court-ல் செலுத்தி வைத்தால், வெளியேற்றத்திலிருந்து நிவாரணம் கிடைக்கலாம்.

2.உரிமையாளரின் அனுமதியில்லாமல் வீட்டை வேறொருவரிடம் ஒப்படைத்தால்! — பிரிவு 21(2)(c)

நீங்கள் வாடகைக்கு எடுத்த வீட்டை, முழுவதையோ அல்லது ஒரு பகுதியையோ உரிமையாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியில்லாமல் வேறொருவரிடம் ஒப்படைத்திருந்தால், வீட்டைத் திரும்பப் பெற உரிமையாளர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

சட்டம் சொல்வது என்ன

3. வீட்டைத் தவறாகப் பயன்படுத்தினால்! — பிரிவு 21(2)(d)

வீட்டுக்குச் சேதம் ஏற்படுத்துவது, பொதுமக்களுக்குத் தொந்தரவு விளைவிப்பது, சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்துவது அல்லது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிற வகைகளில் தவறாகப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறீர்களா? அத்தகைய தவறான பயன்பாட்டை நிறுத்துமாறு உரிமையாளர் நோட்டீஸ் கொடுத்தும் அது தொடர்ந்தால், உரிமையாளர், வீட்டைக் காலி செய்யக் கோரலாம்.

4. வீட்டைப் பழுதுபார்க்க அல்லது மறுகட்டுமானம் செய்ய வேண்டியிருந்தால்! — பிரிவு 21(2)(e), (f)

வீட்டைக் காலி செய்யாமல் மேற்கொள்ள முடியாத பழுதுபார்ப்பு, மறுகட்டுமானம், கூடுதல் கட்டுமானம், மாற்றங்கள் அல்லது இடித்துக் கட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். மேலும், தகுதியுள்ள அதிகாரியால் நிலப் பயன்பாட்டில் மாற்றம் செய்யப்பட்டதன் காரணமாகவும் இத்தகைய பணிகள் தேவைப்படலாம். இச்சூழ்நிலைகளில், சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உரிமையாளர் வீட்டைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கலாம்.

குறிப்பு: பழுதுபார்ப்பு அல்லது மறுகட்டுமானத்துக்காக வீடு காலி செய்யப்பட்டால், மீண்டும் அதில் குடியேறுவது தொடர்பாகப் பிரிவு 21(2)(e)-ல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் பொருந்தும்

5. உரிமையாளருக்கே வீடு தேவைப்பட்டால்! — பிரிவு 21(2)(g)

வீட்டு உரிமையாளருக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ அந்த வீடு உண்மையாகத் தேவைப்படுகிறது; அதே நகர்ப்புறப் பகுதியில் அவர்களுக்குப் பொருத்தமான வேறு இடமும் இல்லை என்றால், சட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு வீட்டைக் காலி செய்யக் கோரலாம்.

சட்டம் சொல்வது என்ன

கவனிக்க வேண்டிய விஷயம்: மேலே கூறப்பட்ட காரணங்கள் இருப்பதாகக் கூறி, வீட்டு உரிமையாளர் தன்னிச்சையாக வாடகைதாரரை வெளியேற்றவோ, பூட்டை மாற்றவோ, குடிநீர் அல்லது மின்சார இணைப்பைத் துண்டிக்கவோ முடியாது. சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறை அடிப்படையிலேயே வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

வாடகைதாரர்களுக்கும் கடமைகள் இருக்கின்றன!

வாடகை வீட்டில் குடியிருக்கிறோம் என்பதற்காக நம் விருப்பப்படி வீட்டைப் பயன்படுத்த முடியாது. ஒப்பந்தத்தின்படி வாடகையைச் சரியான நேரத்தில் செலுத்த வேண்டும். வீட்டைச் சேதப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும். ஏதேனும் சேதம் ஏற்பட்டால் உரிமையாளரிடம் தெரிவிக்க வேண்டும். உரிமையாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி வீட்டின் உடைமையை வேறொருவரிடம் ஒப்படைக்கக் கூடாது.

குடும்ப வன்முறை: அடிப்பது மட்டும்தான் வன்முறையா? சட்ட பாதுகாப்பும், உதவியும்! சட்டம் சொல்வது என்ன?-7



.

Previous Post

‘நான் 3 கோடி ரூபாய் கமிஷன் வாங்கினேனா?’- அமைச்சர் கீர்த்தனா விளக்கம் | minsiter keerthana explain on corruption allegation

Next Post

வேலூர் திமுக மாவட்டச் செயலாளர், தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடுகளில் ரெய்டு; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி! | vigilance surprise raid at the residence of vellore dmk district secretary and businessman sekar reddy

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வேலூர் திமுக மாவட்டச் செயலாளர், தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடுகளில் ரெய்டு; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி! | vigilance surprise raid at the residence of vellore dmk district secretary and businessman sekar reddy

வேலூர் திமுக மாவட்டச் செயலாளர், தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடுகளில் ரெய்டு; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி! | vigilance surprise raid at the residence of vellore dmk district secretary and businessman sekar reddy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In