Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வேலூர் திமுக மாவட்டச் செயலாளர், தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடுகளில் ரெய்டு; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி! | vigilance surprise raid at the residence of vellore dmk district secretary and businessman sekar reddy

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 29, 2026
in அரசியல் செய்திகள்
0
வேலூர் திமுக மாவட்டச் செயலாளர், தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடுகளில் ரெய்டு; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி! | vigilance surprise raid at the residence of vellore dmk district secretary and businessman sekar reddy
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தி.மு.க வேலூர் தெற்கு மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஏ.பி.நந்தகுமாரின் காட்பாடி வீட்டில் இன்று காலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். டி.எஸ்.பி தலைமையிலான 7-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.

அணைக்கட்டு தொகுதியில் தொடர்ந்து 2 முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர் நந்தகுமார். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் 3-வது முறையாக போட்டியிட்டவர் தோல்வியைத் தழுவினார். காட்பாடி காந்தி நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், அவரின் வீட்டில் அதிரடி காட்டியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.

சேகர் ரெட்டி வீடு

சேகர் ரெட்டி வீடு

அதேபோல, பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் காட்பாடி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று காலை சோதனையில் ஈடுபட்டது. அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆட்சிக்காலங்களில் செல்வாக்குமிக்கவராக வலம் வந்தவர் சேகர் ரெட்டி. சமீபத்திலும், அவரது காட்பாடி வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளும், பணமும் திருடப்பட்டது. இது சம்பந்தமாக, பணிப்பெண்களே கைதுசெய்யப்பட்டார்கள்.

இந்த நிலையில், சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையை விரைவாக முடித்துக்கொண்டு வெளியேறிவிட்டார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினர். இந்த திடீர் சோதனைக்கான காரணம் என்ன? என்பது பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் இருந்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.



.

Previous Post

`வீட்டு உரிமையாளர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்பு என்ன?' – சட்டம் சொல்வது என்ன? – 8

Next Post

'முதலமைச்சர் வந்தா நைட்டு வரை காத்திருக்கணுமா?' – ஆவேசமான மேயர் பிரியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
'முதலமைச்சர் வந்தா நைட்டு வரை காத்திருக்கணுமா?' – ஆவேசமான மேயர் பிரியா

'முதலமைச்சர் வந்தா நைட்டு வரை காத்திருக்கணுமா?' - ஆவேசமான மேயர் பிரியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In