Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சபரிமலை இருமுடிப் பை தயாரிக்க தமிழக அரசின் இலவச வேட்டி; திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு விசாரணை | Tamil Nadu government free dhotis used to make Sabarimala ‘Irumudi’ bags; Travancore Devaswom Board inquiry

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 25, 2026
in அரசியல் செய்திகள்
0
சபரிமலை இருமுடிப் பை தயாரிக்க தமிழக அரசின் இலவச வேட்டி; திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு விசாரணை | Tamil Nadu government free dhotis used to make Sabarimala ‘Irumudi’ bags; Travancore Devaswom Board inquiry
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்கள் ஊர்களில் இருந்தே இருமுடி கட்டிச் செல்வார்கள். அல்லது பம்பா கணபதி கோயில் வளாகத்தில் உள்ள கெட்டு நிறை மண்டபத்தில் இருமுடி கட்டிச் செல்வது வழக்கம்.

பம்பாவில் இருமுடி கட்டுவதற்காக 300 ரூபாய்க்கு ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். கெட்டுநிறை மண்டபத்தில் வெள்ளைநிற இருமுடிப் பையில் நெய் தேங்காய் மற்றும் பூஜைப் பொருட்களுடன் அர்ச்சகர்கள் இருமுடி கட்டித்தருவது வழக்கம்.

இந்த நிலையில் பம்பையில் உள்ள திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் ‘கெட்டுநிறை’ மையத்தில், தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பரிசாக வழங்கும் இலவச வேட்டிகள், இருமுடிப் பைகளாகத் தைக்கப்பட்டு வழங்கப்படுவதாக புகார் எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலைக்குச் சென்றிருந்தனர். அப்போது பம்பையில் உள்ள இருமுடி கட்டும் மையத்தில் ரூ.300 செலுத்தி இருமுடிப் பைகளைப் பெற்றதாகவும், ​சன்னிதானத்தை அடைந்து ஐயப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்வதற்காக இருமுடிக் கட்டை அவிழ்த்தபோதுதான், அந்த இருமுடிப் பையில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ முத்திரையுடன் கூடிய வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தது தெரியவந்தது.

பொங்கல் 2025 – வேட்டி, சேலை வழங்கும் திட்டம் எனவும், முகமை: தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம் எனவும், திட்டத்தின் பதிவு எண், ரகம், தொகுப்பு எண் ஆகியவை இடம்பெற்றிருந்தன என அவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

பம்பாவில் உள்ள கெட்டுநிறை மண்டபம்

பம்பாவில் உள்ள கெட்டுநிறை மண்டபம்

தமிழகத்தில் ஏழை எளிய குடும்பங்களுக்காக ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக விநியோகிக்கப்படும் நலத்திட்ட வேட்டிகள், கேரளாவுக்குக் கடத்தப்பட்டு, இருமுடிப் பைகளாகத் தைக்கப்பட்டு வணிக ரீதியாக விற்கப்படுவது எப்படி என்று தமிழக பக்தர்கள் கேள்வி எழுப்பியது கேரளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



.

Previous Post

விபி-ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் 31.69 கோடி வேலைநாட்கள் உருவாக்கம் — மத்திய அரசு தகவல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ரயில் பயணத்தில் மரணம்; ரயில்வே-யின் அலட்சியத்தால் உயிரிழந்தவருடன் 12 மணி நேரம் பயணித்த பயணிகள் | Due to railway negligence, a cancer patient’s body remained on the train for 12 hours alongside fellow passengers

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரயில் பயணத்தில் மரணம்; ரயில்வே-யின் அலட்சியத்தால் உயிரிழந்தவருடன் 12 மணி நேரம் பயணித்த பயணிகள் | Due to railway negligence, a cancer patient’s body remained on the train for 12 hours alongside fellow passengers

ரயில் பயணத்தில் மரணம்; ரயில்வே-யின் அலட்சியத்தால் உயிரிழந்தவருடன் 12 மணி நேரம் பயணித்த பயணிகள் | Due to railway negligence, a cancer patient’s body remained on the train for 12 hours alongside fellow passengers

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In