Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

விபி-ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் 31.69 கோடி வேலைநாட்கள் உருவாக்கம் — மத்திய அரசு தகவல் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 25, 2026
in அரசியல் செய்திகள்
0
விபி-ஜி ராம் ஜி சட்டம் 2025 குறித்த விழிப்புணர்வு… நாடு முழுவதும் பஞ்சாயத்து பிரதிநிதிகள் கூட்டம் | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதுதொடர்பாக, பத்திரிகை தகவல் அலுவலகம் வளியிட்ட செய்திக் கட்டுரையில், கடந்த 2026 ஜூலை 1 அன்று அமலுக்கு வந்த இச்சட்டம், எவ்வித இடையூறுமின்றித் தடையின்றித் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தன்னார்வமாக முன்வரும் ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்தைச் சேர்ந்த வயதுவந்த உறுப்பினர்களுக்கும் ஒரு நிதியாண்டில் 125 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பிற்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

மேலும், வளமான மற்றும் மீள்திறன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்கும் நோக்கில், அதிகாரமளித்தல், வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கு இத்திட்டம் முன்னுரிமை அளிக்கிறது. குறிப்பாக, நீர்ப்பாதுகாப்பு, முக்கிய கிராமப்புற உள்கட்டமைப்பு, வாழ்வாதாரம் சார்ந்த உள்கட்டமைப்பு மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளைத் தணிப்பதற்கான பணிகள் ஆகிய நான்கு முதன்மைக் கருப்பொருள் பகுதிகளில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.

கிராமப்புற வளர்ச்சியின் மையமாக உள்ளூர் தேவைகளைக் கொண்டுவரும் வகையில், பங்கேற்புத் திட்டமிடல் முறை பின்பற்றப்படுகிறது. இதன்படி, கிராம சபை மற்றும் கிராமப் பஞ்சாயத்துகளின் தீவிரப் பங்கேற்புடன் உள்ளூர் தேவைகள் அடையாளம் காணப்பட்டு பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கிராமப் பஞ்சாயத்து எல்லைக்குள் உள்ள சொத்துக்கள், உள்கட்டமைப்பு மற்றும் சேவை வழங்கல் இடைவெளிகளை விரிவாகக் கணக்கெடுத்துச் சொத்துச் செயல்திட்டம் உருவாக்கப்படுகிறது. மேலும், ஜிஐஎஸ், யுக்தாரா, பிஎம் விரைவு சக்தி மற்றும் பிற டிஜிட்டல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி, புவிசார் மற்றும் புவிசாரா தரவுகளின் அடிப்படையில் சான்றுகளுடனான ஒருங்கிணைந்த திட்டமிடல் முன்னெடுக்கப்படுகிறது.

இத்திட்டம் அமலுக்கு வந்த 2026 ஜூலை 1 முதல் செப்டம்பர் 24 நிலவரப்படி, நாடு முழுவதும் இத்திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. 2026-27 ஆம் நிதியாண்டில் 10.88 கோடி தொழிலாளர்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளதுடன், 31.69 கோடிக்கும் அதிகமான வேலைநாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் பெண்களின் பங்களிப்பு 61.65 சதவீதமாக உயர்ந்துள்ளது. தேவைக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கும் அடிப்படையில் சுமார் 2.23 கோடி கிராமப்புறக் குடும்பங்களைச் சேர்ந்த 2.81 கோடிக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 2.31 லட்சம் கிராம ஊராட்சிகளில் 97.17 லட்சம் பணிகள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் மூலம் இதுவரை 2.83 லட்சம் நிலையான சொத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ₹300 முதல் ₹450 வரை ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 15.17 கோடி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

நிதி ஒதுக்கீட்டைப் பொறுத்தவரையில், 2026-27 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால ஒதுக்கீடாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் ₹93,841 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக ₹25,880 கோடி மதிப்பிலான முதன்மை நிதி ஏற்கனவே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

அடிமட்ட அளவிலான பங்கேற்புத் திட்டமிடல், டிஜிட்டல் அமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஆகியவை இத்திட்டத்தின் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புடைமையையும் வலுப்படுத்தியுள்ளன. வேலைவாய்ப்பை நிலையான சொத்து உருவாக்கத்துடன் இணைப்பதன் மூலம், விபி-ஜி ராம் ஜி திட்டம் கிராமப்புறங்களில் மீள்திறன் கொண்ட வாழ்வாதாரத்தையும் ஒட்டுமொத்த கிராமப்புற வளர்ச்சியையும் உறுதி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தவெக அரசுக்கு கனிமொழி கேள்வி|Missing Girl, Abuse Allegations: Kanimozhi Raises Alarm Over Child Safety

Next Post

சபரிமலை இருமுடிப் பை தயாரிக்க தமிழக அரசின் இலவச வேட்டி; திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு விசாரணை | Tamil Nadu government free dhotis used to make Sabarimala ‘Irumudi’ bags; Travancore Devaswom Board inquiry

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சபரிமலை இருமுடிப் பை தயாரிக்க தமிழக அரசின் இலவச வேட்டி; திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு விசாரணை | Tamil Nadu government free dhotis used to make Sabarimala ‘Irumudi’ bags; Travancore Devaswom Board inquiry

சபரிமலை இருமுடிப் பை தயாரிக்க தமிழக அரசின் இலவச வேட்டி; திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு விசாரணை | Tamil Nadu government free dhotis used to make Sabarimala 'Irumudi' bags; Travancore Devaswom Board inquiry

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In