Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`விஷமிகளுக்கு ஏமாற்றமே; ரஜினியின் அஸ்திவாரத்தை கலைப்பது எளிதல்ல’ – சோளிங்கர் ரவி பதிலடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 25, 2026
in அரசியல் செய்திகள்
0
`விஷமிகளுக்கு ஏமாற்றமே; ரஜினியின் அஸ்திவாரத்தை கலைப்பது எளிதல்ல’ – சோளிங்கர் ரவி பதிலடி
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான `ஜெயிலர் 2’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்து `ஹிட்’ அடித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் வன்மத்துடன் கமெண்ட்ஸுகளை பதிவிட்டுவந்த நபர்களுக்கு பதிலடி தரும்விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச் செயலாளரான சோளிங்கர் என்.ரவி.

ரஜினியுடன் சோளிங்கர் என்.ரவி

`ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில், “பழக, பழக பாலும் புளிக்கும். பார்க்க பார்க்க அனைத்தும் சலிக்கும்… ஆனால், 51 வருடங்களாக பார்த்த முகமும், நடிப்பும் இன்றும் நமக்கு சலிக்காமல், வெறுக்காமல் ஒருவரின் காந்த சக்தியால் நம்மை ஈர்த்து கொண்டிருப்பது எவ்வாறு சாத்தியம்? அந்த விடைத் தெரியாத வசீகரம்தான், தலைவர் ரஜினிகாந்த். அவருக்கு மட்டுமே கிடைத்த வரம்; அதனால்தான் அவர் அதியப்பிறவி.

ஒரு நடிகரால் குறைந்தபட்சம் ஒரு தலைமுறையினரை தனது நடிப்பால் கவர செய்வதே… இங்கு கடினமாக இருக்கும் சமயத்தில், 5 தலைமுறையினரை தனது நடிப்பால் இவர் கவர்ந்து கொண்டிருப்பது எப்படி? இது தலைவர் ரஜினிகாந்த்தால் மட்டுமே சாத்தியமான மாயாஜாலம்.

வருடந்தோறும் வதந்திகளை பரப்பி, எண்டு கார்டு போட நினைக்கும் விஷமிகள் தலைவர் ரஜினிகாந்த்தின் எனர்ஜிமிக்க வெற்றியைப் பார்த்து ஏமாற்றமே அடைந்திருக்கிறார்கள். தலைவர் மீது பல அவதூறுகளை சுமத்தியும் 51 வருடங்களாக அவரை வீழ்த்த முடியாமல் போனது எப்படி? எந்த காலத்திலும் அவர் மீது பிறர் போடும் பழிகளாலும், சில படத்தின் தோல்விகளாலும் அவரின் வீழ்ச்சியை நிர்ணயித்துவிட முடியாது.

சோளிங்கர் என்.ரவி வெளியிட்ட அறிக்கை

ஏனென்றால், தலைவர் ரஜினிகாந்த் என்ற மனிதர் வெற்றிபெறும் முன்பு தனது அஸ்திவாரத்தை தன்னந்தனியான முயற்சியுடனும், கடின உழைப்பு, தனித்துவம், ஸ்டைல், துணிவு போன்றவைகளால் உருவாக்கி, வெற்றி பின்னரும் ஆணவமற்ற, எளிமை, பணிவு போன்றவைகளால் தனது அடையாளத்தை பலப்படுத்திக்கொண்டே இருக்கிறார். தலைவரின் அஸ்திவாரத்தை கலைப்பது அவ்வளவு எளிதல்ல.

எவரையும் வஞ்சிக்காமல் தனக்கான குறிக்கோளை நோக்கி தன் வழியில் அவர் இன்றும் பயணித்துக் கொண்டிருக்கிறார். சறுக்கல்களைச் சந்தித்தாலும் தனக்கான சவால்களை சளைக்காமல் எதிர்கொண்டு, சரிந்துவிடாமல் சாதனை படைத்து வரும் சரித்திரம்தான் தலைவர் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்” என்று குறிப்பிட்டிருக்கிறார் சோளிங்கர் என்.ரவி.



.

Previous Post

கேரள லோக்பவனில் இனி சைவ சமையல் மட்டுமே புதிய கவர்னர் பதவியேற்றதும் அதிரடி!

Next Post

ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: “எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்” – ஓம் பிர்லா| Gyanesh Kumar’s resignation: “We will take action if opposition parties submit a notice” – Om Birla

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: “எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்” – ஓம் பிர்லா| Gyanesh Kumar’s resignation: “We will take action if opposition parties submit a notice” – Om Birla

ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: ``எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்" - ஓம் பிர்லா| Gyanesh Kumar’s resignation: "We will take action if opposition parties submit a notice" – Om Birla

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In