Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கேரள லோக்பவனில் இனி சைவ சமையல் மட்டுமே புதிய கவர்னர் பதவியேற்றதும் அதிரடி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 25, 2026
in அரசியல் செய்திகள்
0
கேரள லோக்பவனில் இனி சைவ சமையல் மட்டுமே
புதிய கவர்னர் பதவியேற்றதும் அதிரடி!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சிக்கிம் மாநில ஆளுநராகப் பணியாற்றி வந்த ஓம் பிரகாஷ் மாத்துர், கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டு நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் கேரளத்தின் 29-வது கவர்னர் ஆவார். முன்னதாக, கேரளா மற்றும் தமிழகத்தின் கூடுதல் ஆளுநர் பொறுப்பை கவனித்து வந்த ராஜேந்திர அர்லேக்கர் முழுநேரத் தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த எதிர்கட்சி தலைவர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் புறக்கணித்தனர். முதல்வர் வி.டி.சதீசன் பூங்கொத்து வழங்கி கவர்னரை வரவேற்றார். புதிய ஆளுநர் மாத்துர் தீவிர சைவ உணவுப் பழக்கம் கொண்டவர் என்பதால், லோக்பவன் சமையலறையில் மாமிசமோ, மீன் உணவுகளோ சமைக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ​இந்த உத்தரவு குறித்து லோக்பவன் வட்டாரங்கள் விளக்கம் அளிக்கையில், ஆளுநர் மாளிகை சமையலறையானது ஆளுநர் மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் சிலருக்கு மட்டுமே உணவு தயாரிக்கப் பயன்படுகிறது என்றும், மற்ற அரசுப் பணியாளர்கள் தங்களது வீடுகளிலிருந்தே உணவைக் கொண்டு வருகிறார்கள் அல்லது வெளியே உணவருந்துகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளன. எனவே, ஊழியர்களின் தனிப்பட்ட உணவுக் கட்டுப்பாடுகளில் எந்தவிதத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும், வழக்கமாக லோக்பவனுக்கு வரும் விருந்தினர்களுக்கு நடத்தப்படும் அரசு விருந்துகளில் எப்போதும்போல சைவ உணவுகளே தொடர்ந்து பரிமாறப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கேரள கவர்னராக பதவியேற்ற ஓம் பிரகாஷ் மாத்துர்

கேரள கவர்னராக பதவியேற்ற ஓம் பிரகாஷ் மாத்துர்

முன்னாள் ஆளுநர் ஆரிப் முகமது கான் காலத்தில் அசைவ உணவுகளும், அவரைத் தொடர்ந்து வந்த ராஜேந்திர அர்லேக்கர் காலத்தில் மீன் உணவுகளும் லோக்பவனில் பயன்பாட்டில் இருந்தன. தற்போது ஓம் பிரகாஷ் மாத்துர் வருகையால், லோக்பவன் சமையலறை முழுமையான சைவ முறையாக மாறுகிறது. ​பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவரான ஓம் பிரகாஷ் மாத்துர், பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவர் ஆவார். நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த காலகட்டத்தில், அம்மாநில பா.ஜ.க. பொறுப்பாளராக மாத்துர் செயல்பட்டார்.



.

Previous Post

“புதிய நடிகர்கள் டெல்லியில் அமர்ந்திருக்கிறார்கள்: யார் வந்தாலும்…" – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Next Post

`விஷமிகளுக்கு ஏமாற்றமே; ரஜினியின் அஸ்திவாரத்தை கலைப்பது எளிதல்ல’ – சோளிங்கர் ரவி பதிலடி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`விஷமிகளுக்கு ஏமாற்றமே; ரஜினியின் அஸ்திவாரத்தை கலைப்பது எளிதல்ல’ – சோளிங்கர் ரவி பதிலடி

`விஷமிகளுக்கு ஏமாற்றமே; ரஜினியின் அஸ்திவாரத்தை கலைப்பது எளிதல்ல’ - சோளிங்கர் ரவி பதிலடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In