Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நெருங்கும் தீபாவளி: வாரத்திற்கு 8 மணி நேரம் மின்வெட்டு அமல் – குஜராத் வியபாரிகள் சோகம் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 24, 2026
in அரசியல் செய்திகள்
0
நெருங்கும் தீபாவளி: வாரத்திற்கு 8 மணி நேரம் மின்வெட்டு அமல் – குஜராத் வியபாரிகள் சோகம் | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 24, 2026 6:28 PM IST

கடந்த 16 ஆம் தேதி குஜராத்தின் மின்தேவை இதுவரை இல்லாத அளவிற்கு 29,822 மெகாவாட்டை எட்டியது. மின்வாகனங்களின் பயன்பாடு, நவராத்திரி பண்டிகை உள்ளிட்டவற்றால் மின் தேவை அதிகரித்ததாக கூறப்படுகிறது.

வாரத்திற்கு 8 மணி நேரம் மின்வெட்டு அமல்
வாரத்திற்கு 8 மணி நேரம் மின்வெட்டு அமல்

தீபாவளி இன்னும் சில நாட்களே உள்ளதால் ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள், இனிப்புக் கடைகள் மற்றும் பஜார் பகுதி முழுவதும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பண்டிகை நாட்கள் காரணமாக மின்பயன்பாடு அளவு அதிகரித்துள்ளது. எல் நினோ காரணமாக பல மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் காரணமாகவும் மின்பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தேசிய அளவில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு மின்வெட்டு அதிகரித்து வருகிறது.

இதனிடையே குஜராத்தில் வாரத்திற்கு 8 மணிநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஜவுளித்துறையில் மட்டும் சுமார் 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக தொழில்துறையினர் கூறியுள்ளனர். தீபாவளிக்கு ஆர்டர் அதிகரித்துள்ளதால் அதனை உரிய நேரத்தில் செய்து முடிக்கவில்ல என்றால் வியபாரிகளின் இழப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

கடந்த 16 ஆம் தேதி குஜராத்தின் மின்தேவை இதுவரை இல்லாத அளவிற்கு 29,822 மெகாவாட்டை எட்டியது. மின்வாகனங்களின் பயன்பாடு, நவராத்திரி பண்டிகை உள்ளிட்டவற்றால் மின் தேவை அதிகரித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மின்நெருக்கடியை சமாளிக்க, வாரத்திற்கு 8 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதனால், சூரத் பகுதியில் மட்டும் சுமார் 3 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தீபாவளி நெருங்கும் நிலையில், ஒரு வாரத்தில் மட்டும் ஜவுளித்துறையில் சுமார் 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தீபாவளிக்கான ஆர்டர்களை உரிய நேரத்தில் நிறைவேற்ற முடியாவிட்டால், கூடுதல் இழப்பு ஏற்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மின் வெட்டு காரணமாக, மாநிலம் முழுவதும் சுமார் 25 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஹோர்முஸ் நீரிணை பாதிப்பால் குஜராத் தொழில்துறை கடும் பின்னடைவை சந்தித்த நிலையில், தற்போதைய மின்வெட்டு அதனை மேலும் சிக்கலாக்கி உள்ளது.



.

Previous Post

"திருமாவளவனை முதல்வராக்க நானும் எடப்பாடியும் முயன்றோம்" – என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்?

Next Post

‘2500 பெண்கள், முக்கிய நிர்வாகிகள்; அழைப்பு விடுத்த தனுஷ்; OMR இல் கூட்டம்!’ – அப்டேட் என்ன? |Dhanush Invites 2,500 Women and Key Functionaries for OMR Meeting: What’s the Latest Update?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘2500 பெண்கள், முக்கிய நிர்வாகிகள்; அழைப்பு விடுத்த தனுஷ்; OMR இல் கூட்டம்!’ – அப்டேட் என்ன? |Dhanush Invites 2,500 Women and Key Functionaries for OMR Meeting: What’s the Latest Update?

'2500 பெண்கள், முக்கிய நிர்வாகிகள்; அழைப்பு விடுத்த தனுஷ்; OMR இல் கூட்டம்!' - அப்டேட் என்ன? |Dhanush Invites 2,500 Women and Key Functionaries for OMR Meeting: What’s the Latest Update?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In