Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“ஒன்றிய அரசின் உத்தரவுக்கு முதல்வர் விஜய் அடிபணிந்துள்ளது, மிகப்பெரிய தலைகுனிவு" – சீமான்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 22, 2026
in அரசியல் செய்திகள்
0
“வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள்”- விஜய்சேதுபதிக்கு சீமான் ஆதரவு குரல்| Seeman voices support for Vijay Sethupathi
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு மாறாக காவல்துறை கொடி நாள் பேட்ஜில் தமிழைத் தவிர்த்து இந்தி மற்றும் ஆங்கிலம் இடம்பெற்றதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு காவல்துறையின் கொடி நாள் வில்லையில் தமிழைப் புறக்கணித்து இந்தியைத் திணிப்பதா? இதுதான் இந்தி திணிப்பையும், ஒன்றிய அரசின் ஆதிக்கத்தையும் தவெக அரசு எதிர்க்கும் முறையா? காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழ்நாடு காவல்துறையினர் தங்களது சீருடையில் அணியும் கொடி நாள் வில்லையில் தமிழ்மொழி முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு, இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தமிழ்நாட்டின் ஆட்சிமொழியான தமிழுக்கே தமிழ்நாடு காவல்துறையில் இடமில்லாத நிலையை தவெக அரசு ஏற்படுத்தியிருப்பது வெட்கக்கேடானது. கடந்த 29.09.2026 அன்று இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து, 04.10.2026 அன்று தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சுற்றறிக்கை வெளியிட்டு, இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றுள்ள வில்லையை அணிய அறிவுறுத்தியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தமிழைத் தவிர்த்துவிட்டு இந்தியை மட்டும் இடம்பெறச் செய்ய வேண்டுமென்ற ஒன்றிய அரசின் முடிவை தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டது ஏன்?

இதுதான் இந்தி திணிப்பையும், ஒன்றிய அரசின் ஆதிக்கத்தையும் தவெக அரசு எதிர்க்கும் முறையா? இந்தியும் ஆங்கிலமும்தான் தவெக ஆட்சியின் இருமொழிகொள்கையா? தமிழ்நாட்டின் காவல்துறையினர் அணியும் ஒரு சிறிய வில்லையில்கூடத் தமிழுக்கு இடமளிக்க முடியாதென்றால், தவெக அரசுக்கு தமிழ் உணர்வு என்ற ஒன்று அணுவளவாவது இருக்கிறதா? தமிழ்நாட்டில் தமிழ்மொழியைப் பாதுகாக்கப் பல தலைமுறைகளாக நம் முன்னோர்கள் போராடி உயிர் ஈகம் செய்துள்ளனர். மொழிப்போர் ஈகியர்களின் ஈகத்தால் காக்கப்பட்ட தமிழ்மொழியை, ஒன்றிய அரசின் ஒரு கடிதத்திற்காகப் புறக்கணிப்பது அப்போராளிகளின் ஈகத்திற்குச் செய்யும் பெருந்துரோகமாகும். தமிழ்நாட்டில் தமிழுக்கு இடமளிப்பதற்குக்கூட ஒன்றிய அரசிடம் அனுமதி பெற வேண்டுமா?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
சீமான்

தமிழர்களின் வரிப்பணத்தில் இயங்கும் தமிழ்நாடு காவல்துறையின் சீருடையில் தமிழ் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு ஒன்றிய அரசுக்கு என்ன உரிமையிருக்கிறது? தமிழ்நாடு காவல்துறை என்பது தமிழ்நாடு அரசின் அதிகாரத்திற்குட்பட்ட, முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள முதன்மையானத் துறையாகும். அத்துறையில்கூடத் தமிழ்மொழியின் உரிமையை நிலைநாட்ட முடியாமல், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு முதலமைச்சர் விஜய் அடிபணிந்துள்ளது தமிழ்நாட்டிற்கு நிகழ்ந்துள்ள மிகப்பெரிய தலைகுனிவும், அவமானமுமாகும்.

தமிழ்நாடு காவல்துறையின் கொடி நாள் வில்லையில் அன்னைத் தமிழ்மொழியைப் புறக்கணித்துள்ள வரலாற்றுப் பிழைக்கு தவெக அரசு தமிழ்நாட்டு மக்களிடம் உடனடியாக மன்னிப்புகோர வேண்டும். ஆகவே, இருமொழிகொள்கையின்படி, கடந்த திமுக ஆட்சி வரை உறுதியாக கடைபிடிக்கப்பட்டுவந்த, தமிழ்நாடு காவல்துறையின் கொடி நாள் வில்லையில் தமிழ், ஆங்கிலம் மொழிகள் மட்டுமே இடம்பெற வேண்டும். தமிழ் இடம்பெறாத வில்லையை அணிய அறிவுறுத்தும் சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழ்மொழிக்கு முதன்மையளிக்கும் வகையில் புதிய வில்லையை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தேவா: `ஏற்றுக்கொள்ளவோ, கடந்து போகவோ கடினமாக உள்ளது’ – கலங்கிய சீமான்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

மருத்துவத்தில் புதிய சகாப்தம் தொடக்கம்! AI, மரபணு தொழில்நுட்பம் குறித்து ஜிதேந்திர சிங் பேச்சு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

“புதிய தலைமை செயலகம் இடம் தேர்வு செய்தது யார்? முதலமைச்சரா ஜோதிடரா?” – கனிமொழி எம்.பி. | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“புதிய தலைமை செயலகம் இடம் தேர்வு செய்தது யார்? முதலமைச்சரா ஜோதிடரா?” – கனிமொழி எம்.பி. | India News (இந்தியா செய்திகள்)

“புதிய தலைமை செயலகம் இடம் தேர்வு செய்தது யார்? முதலமைச்சரா ஜோதிடரா?” – கனிமொழி எம்.பி. | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In