Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மருத்துவத்தில் புதிய சகாப்தம் தொடக்கம்! AI, மரபணு தொழில்நுட்பம் குறித்து ஜிதேந்திர சிங் பேச்சு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 22, 2026
in அரசியல் செய்திகள்
0
மருத்துவத்தில் புதிய சகாப்தம் தொடக்கம்! AI, மரபணு தொழில்நுட்பம் குறித்து ஜிதேந்திர சிங் பேச்சு | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 22, 2026 7:40 PM IST

தொற்றுநோய்கள், தொற்று அல்லாத நோய்கள் இரண்டுமே சுகாதார அமைப்புகளுக்கு தொடர்ந்து சவாலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

News18
News18

உலக நாடுகள் தற்போது செயற்கை நுண்ணறிவால் வழிகாட்டப்படும், மரபணு சார்ந்த துல்லியமிக்க மருத்துவ காலத்தில் நுழைந்து கொண்டிருப்பதாகவும் மேம்பட்ட சுகாதாரத் தீர்வுகளை அளிக்கும் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்து வருவதாகவும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மருத்துவப் பட்டங்களை வழங்கியபோது இதனை அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் மருத்துவ நிபுணர்கள், நவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்தக் கூடிய வாய்ப்பை பெறுவார்கள் என்றும், அந்தத் தொழில்நுட்பங்களை மருத்துவ நடைமுறைகளுடன் எவ்வாறு உரிய முறையில் ஒருங்கிணைப்பது என்ற சவாலையும் எதிர்கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

இளைஞர்களின் வாழ்க்கை முறையில் அதிகரித்து வரும் நோய்களைக் கட்டுப்படுத்தி சுகாதாரத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது அவசியம் என்று அவர் கூறினார்.

இளநிலை, முதுநிலை, உயர் படிப்புகளை நிறைவு செய்த பட்டதாரிகளுக்கும் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்த டாக்டர் ஜிதேந்திர சிங், இந்நிறுவனத்தின் வளர்ச்சி, மருத்துவக் கல்வி, ஆராய்ச்சிக்கான பங்களிப்புக் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக விழாவில் கலந்துகொள்ள இயலாத துணைவேந்தர் டாக்டர் உமா, விரைவில் குணமடையவும் தனது வாழ்த்துகளை கூறினார்.

சுமார் 4 தசாப்தகால மருத்துவ அனுபவத்தைக் கொண்டுள்ள டாக்டர் ஜிதேந்திர சிங், மருத்துவ நடைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எடுத்துரைத்தார். கடந்த காலத்தில் தொற்றுநோய்கள் மீது கவனம் செலுத்தப்பட்ட நிலையில், தற்போது நீரிழிவு, இருதய நோய்கள் போன்ற வாழ்க்கை முறை சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

தொற்றுநோய்கள், தொற்று அல்லாத நோய்கள் இரண்டுமே சுகாதார அமைப்புகளுக்கு தொடர்ந்து சவாலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இளம் வயதிலேயே நீண்ட கால நோய்கள் ஏற்படுவதால் நோய்த்தடுப்பு, தொடக்க நிலையிலேயே கண்டறிதல், நீண்டகால நோய்த்தடுப்பு மேலாண்மை ஆகியவை முக்கியமானதாக அமைந்துள்ளது என்று கூறினார்.



.

Previous Post

ஸ்டீபன் ஹப்பார்ட் விடுதலை: ரஷ்யா விவகாரத்தில் ட்ரம்ப் விளக்கம்|Did Trump’s Russia Talks Help Free Stephen Hubbard?

Next Post

“ஒன்றிய அரசின் உத்தரவுக்கு முதல்வர் விஜய் அடிபணிந்துள்ளது, மிகப்பெரிய தலைகுனிவு" – சீமான்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள்”- விஜய்சேதுபதிக்கு சீமான் ஆதரவு குரல்| Seeman voices support for Vijay Sethupathi

``ஒன்றிய அரசின் உத்தரவுக்கு முதல்வர் விஜய் அடிபணிந்துள்ளது, மிகப்பெரிய தலைகுனிவு" - சீமான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In