Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Exclusive | பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தான் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு மாறியுள்ளதா? – வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பதில் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 21, 2026
in அரசியல் செய்திகள்
0
Exclusive | பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தான் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு மாறியுள்ளதா? – வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பதில் | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்த நிலையில், நெட்வொர்க் 18 குழுமத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார். நெட்வொர்க் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷி எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அமெரிக்காவின் பாகிஸ்தான் குறித்த நிலைப்பாடு

“2025-ஆம் ஆண்டில் அமெரிக்க செனட் உறுப்பினராக இருந்தபோது, ​​பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஆதரித்தால், அந்த நாட்டுக்கான உதவியைக் குறைக்கும் வகையில் ஒரு மசோதாவைக் கொண்டுவருவதாக கூறியிருந்தீர்கள். இதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?” என நெட்வொர்க் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மார்கோ ரூபியோ, ” உலகில் எங்கு பயங்கரவாதம் நடந்தாலும் அதை நாங்கள் எதிர்க்கிறோம். பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் யாராக இருந்தாலும் அவர்களையும் எதிர்க்கிறோம்.

ஆனால், தற்போது வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளதால், நான் முன்பு வகித்த செனட்டர் பதவியில் இல்லை. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. அதற்கு, சில விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பல்வேறு நாடுகளுடன் உறவுகளைப் பேண வேண்டிய அவசியம் உள்ளது.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை, அந்த நாட்டுடன் அமெரிக்கா உறவைப் பேண வேண்டியுள்ளது. அந்நாட்டிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. புவியியல் அமைப்பின் அடிப்படையிலும் அந்நாட்டுடன் தொடர்பில் இருப்பது அவசியமாகிறது.

இந்திய அரசும் ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் உறவுகளைப் பேணி, அந்த நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து வருகிறது. அதேபோன்ற சிக்கலான சூழலை நாங்களும் எதிர்கொள்கிறோம்.

இவை எளிதில் சமநிலைப்படுத்த முடியாத விஷயங்கள். இருப்பினும், வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாக இத்தகைய உறவுகளைப் பேண வேண்டியுள்ளது.

அதேநேரத்தில், ஒரு நாட்டுடன் உறவைப் பேணுவதால் அந்த நாட்டுடன் நேரடியாகப் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அதன் மூலம், இந்தியா கவலைப்படும் வகையிலான நடவடிக்கைகளைத் தடுக்கவும், அவற்றைக் கைவிடுமாறு வலியுறுத்தவும் உதவ முடியும்” என்று தெரிவித்தார்.

மேலும் இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் ஓரிரு வாரங்கள் அல்லது மாதங்களில் நிறைவேறும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். மும்பை விமான நிலையம் வந்தடைந்த மார்கோ ரூபியோ மற்றும் அவரது மனைவி ஜெனட் ரூபியோவை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் மற்றும் இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.

இதையும் படிங்க: News 18 Exclusive : ஈரானுடன் ஒப்பந்தம் செய்வது மிக கடினம்… அமெரிக்க வெளியுறவு அமைச்சர் நியூஸ் 18-க்கு பிரத்யேக பேட்டி

மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிசை சந்தித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள கேட் வே ஆஃப் இந்தியா முன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மும்பையில் நடைபெறும் ஃபிரீடம் 250 எனும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மார்கோ ரூபியோ, தாஜ் ஹோட்டலில் உள்ள 2008 பயங்கரவாதத் தாக்குதலின் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கும் மார்கோ ரூபியோ, இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டுமிட்டுள்ளார்.



.

Previous Post

'பல்லவன் இல்லத்துக்கு மாற்றப்படுகிறதா தலைமைச் செயலகம்?' – அதிகாரிகள் சொல்வதென்ன?

Next Post

அமெரிக்கக் குழந்தைகள் அனைவருக்கும் SpaceX பங்கு! – எலான் மஸ்க்கின் $10.5 பில்லியன் திட்டம்!/ SpaceX Shares for Every American Child: Elon Musk’s $10.5 Billion Plan

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமெரிக்கக் குழந்தைகள் அனைவருக்கும் SpaceX பங்கு! – எலான் மஸ்க்கின் $10.5 பில்லியன் திட்டம்!/ SpaceX Shares for Every American Child: Elon Musk’s $10.5 Billion Plan

அமெரிக்கக் குழந்தைகள் அனைவருக்கும் SpaceX பங்கு! - எலான் மஸ்க்கின் $10.5 பில்லியன் திட்டம்!/ SpaceX Shares for Every American Child: Elon Musk’s $10.5 Billion Plan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In