Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சிஜேபி சௌரவ் தாஸ் & அஷுதோஷ்க்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு! – நீதிமன்றம் உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 19, 2026
in அரசியல் செய்திகள்
0
சிஜேபி சௌரவ் தாஸ் & அஷுதோஷ்க்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு! – நீதிமன்றம் உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 19, 2026 8:56 PM IST

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர்களான சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்காவின் நீதிமன்றக் காவலை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News18
News18

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்காவுக்கு மேலும் இரண்டு நாள் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என இந்தியா கூட்டணி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, மாணவர்கள் அமைப்பினர் தொடர்ந்து டெல்லியில் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து போராட வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். குறிப்பாக சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே விமானத்தின் உள்ளே வைத்தே கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தர் போராட்ட களத்தில் இருந்து நீக்கப்பட்டு, அங்கு இனி போராட அனுமதி கிடையாது என மத்திய உள்துறை அனுமதியுடன் டெல்லி காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதனை மீறி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர்கள் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா, அஜிங்க்யா ஷிண்டே உள்ளிட்டோர் நேற்று (14ஆம் தேதி) தடையை மீறி ஜந்தர் மந்தருக்குள் நுழைந்து இந்தியக் கொடியை காண்பித்தனர்.

உடனடியாக அங்கே இருந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இதில்,  அஜிங்க்யா ஷிண்டேவுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகிய இருவருக்கும் ஐந்து நாள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்றுடன் அவர்களின் நீதிமன்றக் காவல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து நீதிமன்றம், சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோரின் நீதிமன்றக் காவலை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் அவர்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



.

Previous Post

’உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி’ – திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மமக?

Next Post

அரசியல் பிரச்னைக்கான தீர்வை பெண்களின் கருப்பையில் தேடாதீர்கள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அரசியல் பிரச்னைக்கான தீர்வை பெண்களின் கருப்பையில் தேடாதீர்கள்!

அரசியல் பிரச்னைக்கான தீர்வை பெண்களின் கருப்பையில் தேடாதீர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In