Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அரசியல் பிரச்னைக்கான தீர்வை பெண்களின் கருப்பையில் தேடாதீர்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 20, 2026
in அரசியல் செய்திகள்
0
அரசியல் பிரச்னைக்கான தீர்வை பெண்களின் கருப்பையில் தேடாதீர்கள்!
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பெண்களை குழந்தை பெறும் இயந்திரமாக மட்டுமே பார்க்கிற மனோநிலை சாதாரண மனிதர்கள் தொடங்கி அரசு எந்திரம் வரைக்கும் எல்லா இடங்களிலும் புரையோடிக் கிடக்கிறது. ஆண்களுக்கும் மேலாகப் பெண்கள் தங்களை நிரூபித்த பிறகும்கூட இந்த அவலம் தொடரவே செய்கிறது.

தமிழகத்தின் கருவுறுதல் விகிதம் 1.3 ஆகக் குறைந்துள்ளது என்ற செய்தியைத் தொடர்ந்து, `பெண்களே, அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று எல்லாப் பக்கமிருந்தும் குரல்கள் எழுகின்றன. அரசும்கூட இதே குரலில் இணைகிறது. கருவுறுதல் விகிதம் குறைவது தமிழ்நாட்டில் மட்டுமல்ல… ஜப்பான், தென்கொரியா, ஐரோப்பா என உலகம் முழுக்க இன்று பிரச்னையாக எழுந்திருக்கிறது. கால மாற்றத்தால் பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு
பெற்றார்கள். தங்கள் உடல் மீதும் வாழ்வின் மீதும் முடிவெடுக்கும் உரிமையைப் பெற்றார்கள். அதன் விளைவுதான், கருவுறுதலில் ஏற்பட்டிருக்கும் சரிவு.

148 கோடி மக்களுடன், இந்தியா உலகிலேயே மக்கள்தொகையில் முதலிடத்தில் உள்ளது. மக்கள்தொகையைக் குறைக்க வேண்டும் என்பதுதான் உண்மையில் நம் நாட்டின் நிலை. மாறாக, குழந்தைப் பிறப்பை அதிகரிக்க தென்மாநில அரசுகள் நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றன. ஆந்திராவில் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் குடும்பங்களுக்கு ரூ.30,000 ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பெண் அரசு ஊழியர்களுக்கு மூன்றாவது பிரசவத்துக்கான விடுப்பு ஓர் ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. காரணம், நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும்போது, மக்கள்தொகை அதிகமுள்ள வடமாநிலங்கள் அதிக தொகுதிகளைப் பெறும், தென்மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் குறையும். மேலும், எதிர்காலத்தில் பணியாளர் பற்றாக்குறை ஏற்படும்.

தொகுதி மறுசீரமைப்பு என்பது அரசியல் பிரதிநிதித்துவப் பிரச்னை. பணியாளர் பற்றாக்குறை என்பது பொருளாதாரப் பிரச்னை. இவற்றுக்கான தீர்வை அரசியலமைப்பிலும், நிர்வாகத்திலும் தேட வேண்டுமே தவிர, பெண்களின் கருப்பையில் தேடக்கூடாது. ஒரு குழந்தை பிறந்து 20 வயது வரை பெரும்பாலும் அம்மாக்களின் உழைப்பை எடுத்தே வளர்கிறது. நம் பெண்கள் இவற்றுக்கு இடையேதான் வேலை, தொழில் என்று தங்கள் பொருளாதாரத்தைக் கட்டமைத்து வருகிறார்கள். அவர்களிடம், `இரண்டு, மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்பது, அவர்களது முன்னேற்றத்தைப் பின்னுக்குத் தள்ளும் செயல் அல்லவா?

பெண்களுக்கான மகப்பேறு முதல் குழந்தை வளர்ப்பு வரை, அரசு, குடும்பம், சமூகம், பணியிடம் போன்றவை தருகிற ஆதரவு என்ன? அரசு மருத்துவமனைகளின் மகப்பேறு சுகாதாரம் எந்தளவுக்கு உள்ளது? குழந்தை வளர்ப்பில் அம்மாக்களின் சுமையைக் குடும்பங்கள் எந்தளவுக்குப் பகிர்ந்து கொள்கின்றன? பணிக்குச் செல்லும் அம்மாக்களை இந்தச் சமூகம் எந்தளவுக்குக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குகிறது? மகப்பேறு விடுமுறை முதல் குழந்தைகளுக்கான டே கேர் வரை என பணியிடங்கள் பணிசெய்யும் அம்மாக்களுக்காகச் செய்து கொடுக்கும் அடிப்படை வசதிகள் என்னென்ன?

இவை எதுவுமே இன்று வரை முழுமையாகச் சாத்தியமாகவில்லை. அதனால் அரசும் சமூகமும் குடும்பமும் கருவுறுதல் சரிவைப் பற்றிக் கவலைப்படுவதைவிட முதலில் செய்ய வேண்டியது, மேற்கண்ட கேள்விகளுக்கு நேர்மையோடும் மனட்சாட்சியோடும் விடை தேடுவதுதான்!

‘அவள்’களை அவரவர் நியாயங்களோடு வாழவிடுங்கள்!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்



.

Previous Post

சிஜேபி சௌரவ் தாஸ் & அஷுதோஷ்க்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு! – நீதிமன்றம் உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

டெல்லி: மதுபோதையில் சாக்கடையை விட்டு வெளியே வர மறுத்த அமெரிக்க சுற்றுலாப் பயணி… வைரலாகும் ஷாக் வீடியோ! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டெல்லி: மதுபோதையில் சாக்கடையை விட்டு வெளியே வர மறுத்த அமெரிக்க சுற்றுலாப் பயணி… வைரலாகும் ஷாக் வீடியோ! | India News (இந்தியா செய்திகள்)

டெல்லி: மதுபோதையில் சாக்கடையை விட்டு வெளியே வர மறுத்த அமெரிக்க சுற்றுலாப் பயணி... வைரலாகும் ஷாக் வீடியோ! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In