Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

’உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி’ – திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மமக?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 19, 2026
in அரசியல் செய்திகள்
0
’உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி’ – திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மமக?
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், த.மு.மு.க, ம.ம.க அமைப்புகளின் ஒருங்கிணைந்த மாநிலத் தலைவராக பேராசிரியர் ஜவாஹிருல்லா மீண்டும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். ம.ம.க பொதுச் செயலாளராக அப்துல் சமத், பொருளாளராக கோவை உமர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, ”இஸ்லாமியர்களின் நீண்டகால கோரிக்கையான தனி இடஒதுக்கீட்டை ஏற்று, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்ததார். ஆனால், அடுத்தடுத்து வந்த ஆட்சிகளில் இந்த இடஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இஸ்லாமியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டை குறைந்தபட்சம் 7 சதவீதமாக உயர்த்த வேண்டும். 3.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக நடைமுறையில் உள்ள சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வந்து, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இடஒதுக்கீட்டின் பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பேராசிரியர் ஜவாஹிருல்லா

தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் பொருந்தக்கூடிய சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை முன்வைத்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் வரும் நவம்பர் 17-ஆம் தேதி சென்னையில் மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளது. இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்துவது, இடஒதுக்கீட்டின் பலன்கள் உரியவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வது மற்றும் நீண்டகாலமாகச் சிறையில் உள்ள சிறைவாசிகளின் விடுதலைக்காக நடவடிக்கை எடுப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது.

இதற்கு முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய ஜவாஹிருல்லா, “உள்ளாட்சி தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் நாம் போட்டியிடுவதற்கு சாதகமாக உள்ள வார்டுகளை உடனே ஆய்வு செய்ய வேண்டும். அங்குள்ள மக்கள் பிரச்சினைகளை அதிகாரிகளிடம் கொண்டு செல்ல வேண்டும், அப்படியும் பிரச்சனை தீரவில்லை என்றால் போராட்டங்களை செய்ய வேண்டும்” என்றார்.

கோவை, கரூர் அரசு மருத்துவமனைகளின்
மாத்திரை கவர்களில் இந்தி… சர்ச்சையும் பின்னணியும் என்ன?



.

Previous Post

Minister Sengottaiyan said Did I say that 15 admk mlas would join tvk – ‘15 அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெக-விற்கு வருவார்கள் என சொன்னேனா? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

Next Post

சிஜேபி சௌரவ் தாஸ் & அஷுதோஷ்க்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு! – நீதிமன்றம் உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சிஜேபி சௌரவ் தாஸ் & அஷுதோஷ்க்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு! – நீதிமன்றம் உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)

சிஜேபி சௌரவ் தாஸ் & அஷுதோஷ்க்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு! – நீதிமன்றம் உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In