Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர்! பார் கவுன்சில் எடுத்த முக்கிய நடவடிக்கை | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 6, 2025
in அரசியல் செய்திகள்
0
தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர்! பார் கவுன்சில் எடுத்த முக்கிய நடவடிக்கை | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 06, 2025 6:17 PM IST

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசி தாக்குதல் நடத்த முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது இந்திய பார் கவுன்சில் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.

News18News18
News18

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இன்று பட்டியலிடப்பட்ட வழக்குகளை விசாரணை நடத்தி வந்தார். அப்படி ஒரு வழக்கு விசாரணையின்போது, அங்கிருந்த ராகேஷ் கிஷோர் என்ற மூத்த வழக்கறிஞர், திடீரென தனது காலணியைக் கழற்றி, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் நோக்கி வீச முற்பட்டார்.

உடனே அங்கிருந்த நீதிமன்ற காவலர்கள், வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை மடக்கி பிடித்து அங்கிருந்து வெளியேற்றினர். அப்போது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், “சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது” என முழக்கமிட்டார். தொடர்ந்து அவரை அங்கிருந்து அப்புறப்படுத்திய நீதிமன்ற காவலர்கள் டெல்லி காவல்துறையிடம் அவரை ஒப்படைத்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரபலமான கஜுராஹோ கோயிலில் உள்ள விஷ்ணு சிலை சேதமடைந்தது தொடர்பாக தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் விசாரணை நடத்தினார். அப்போது, சிலையை புதுப்பிக்க உத்தரவிட மனுதாரர் கோரிக்கை வைத்தார். அதற்கு “நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என சொல்கிறீர்கள். அதனால், தெய்வத்திடமே சென்று பிரார்த்தனை செய்யுங்கள். அது தொல்லியல்துறையின் கீழ் இருக்கும் தளம். எனவே ஏ.எஸ்.ஐ.யிடம் அனுமதி கொடுக்க வேண்டும்” என கருத்து தெரிவித்து அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய். இதன் நீட்சியாகவே இந்தச் சம்பவம் நடைபெற்றது என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இடை நீக்கம் செய்து இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. மேலும், ராகேஷ் கிஷோர் மீது ஒழுங்கு நடவடிக்கையையும் இந்திய பார் கவுன்சில் மேற்கொண்டுள்ளது.

முன்னதாக தலைமை நீதிபதி அமர்வில் வழக்கு விசாரணையின் போது இப்படியொரு மோசமான சம்பவம் நடைபெற்றதும், நீதிமன்ற வளாகமே பரபரப்பில் ஆழ்ந்தது. ஆனால், அந்தச் சூழலிலும் நிதானத்தை இழக்காத தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், “கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது. தொடர்ந்து வாதங்கள் நடக்கட்டும்” என பரபரப்பின்றி அமைதியாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 06, 2025 6:17 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர்! பார் கவுன்சில் எடுத்த முக்கிய நடவடிக்கை



.

Previous Post

நீதிபதி கவாய் மீது தாக்குதல் – மு.க.ஸ்டாலின் | Shoe Thrown at Chief Justice P.R. Gavai Sparks Outrage; CM Stalin Condemns Incident

Next Post

பாஜக எம்.பி. காகன் முர்மு மீது கல்வீச்சுத் தாக்குதல்: கல்கத்தாவில் பதற்றம்! | Tension in West Bengal: BJP MP’s Car Vandalized, Murmu Injured in Stone-Pelting.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாஜக எம்.பி. காகன் முர்மு மீது கல்வீச்சுத் தாக்குதல்: கல்கத்தாவில் பதற்றம்! | Tension in West Bengal: BJP MP’s Car Vandalized, Murmu Injured in Stone-Pelting.

பாஜக எம்.பி. காகன் முர்மு மீது கல்வீச்சுத் தாக்குதல்: கல்கத்தாவில் பதற்றம்! | Tension in West Bengal: BJP MP's Car Vandalized, Murmu Injured in Stone-Pelting.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In