Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நிதியை கையாளும் உயர் பொறுப்புகளில் எத்தனை எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மையினர்? – சு. வெங்கடேசன் எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு பதில் | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 6, 2025
in அரசியல் செய்திகள்
0
நிதியை கையாளும் உயர் பொறுப்புகளில் எத்தனை எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மையினர்? – சு. வெங்கடேசன் எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு பதில் | இந்தியா
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அந்த வகையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், எல்.ஐ.சி மற்றும் பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களில் மொத்தம் இருக்கக்கூடிய நிர்வாக இயக்குநர்களில் பட்டியலின, பழங்குடியின மற்றும் சிறுபான்மையினர் எத்தனை நபர்கள் இருக்கிறார்கள்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், எல்ஐசி மற்றும் பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்களில் இயக்குநர்கள் குழுவின் பாலினப் பிரிவினை விவரங்கள் மற்றும் அந்நிறுவனங்களில் தலைவர்/தலைமை நிர்வாக அதிகாரிகளின் எண்ணிக்கை, பட்டியலின, பழங்குடியின மற்றும் சிறுபான்மையினர் எத்தனை நபர்கள் இருக்கிறார்கள் என மத்திய நிதி அமைச்சகத்திற்கு கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சௌதுரி பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதிலில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் இயக்குநர்கள் குழுவில் மொத்தம் 98 நபர்கள் உள்ளனர். இதில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 6, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் 1, சிறுபான்மையினர் 1, ஆண்கள் 86, பெண்கள் 12 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள் குழுவில், பட்டியலினம், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோரில் ஒருவர் கூட இல்லை. ஆண்கள் 9 பேர் மேலாண்மை இயக்குநர்களாக உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஐசி இயக்குநர்கள் குழுவில் மொத்தம் 13 பேர் இருக்கின்றனர். இதில், பழங்குடியினர் ஒருவர் மட்டுமே இருக்கிறார். பட்டியலினம் மற்றும் சிறுபான்மையினர் யாரும் இல்லை. ஆண்கள் 12 பேர், பெண் ஒருவர் அந்தப் பொறுப்பில் இருக்கிறார்.

மேலாண்மை இயக்குநராக ஒருவர் இருக்கிறார். அவர் ஆண் என்றும், பட்டியலின, பழங்குடியின மற்றும் சிறுபான்மையினர் யாரும் அந்தப் பொறுப்பில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் மொத்தம் 48 நபர்கள் இருக்கின்றனர். இதில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேர் உள்ளனர். ஆண்கள் 30 பேரும், பெண்கள் 18 பேரும் அந்தப் பொறுப்பில் உள்ளனர். ஆனால் இதில், பழங்குடி மற்றும் சிறுபான்மையினர் யாரும் இல்லை.

தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்களின் மொத்த எண்ணிக்கை 6. அதில், ஒருவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். மூன்று ஆண்களும், மூன்று பெண்களும் இந்தப் பொறுப்பில் உள்ளனர் என பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மதுரை எம்பி சு. வெங்கடேசன், “அமைச்சரின் பதில் வெறும் புள்ளி விவரங்கள் அல்ல. சாதி பாகுபாடுகளின் வெளிப்பாடே” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பதிவில், “அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மை மற்றும் பெண்கள் ஒருவர் கூட இல்லை. இட ஒதுக்கீடு இல்லாத பதவிகளில் எந்த அளவுக்கு பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கு அமைச்சரின் பதிலே சான்று.

அரசு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள், தலைவர்களில் எத்தனை பேர் பட்டியல் சாதி, பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் என்ற கேள்வியை (எண். 2469/04.08.2025) நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரிடம் எழுப்பி இருந்தேன். அதற்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதுரி அளித்துள்ள பதில் பேரதிர்ச்சியை தருகிறது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மொத்தமுள்ள 9 தலைவர்கள், மேலாண்மை இயக்குநர்களில் ஒருவர் கூட பட்டியல் சாதியை சேர்ந்தவர் இல்லை. பழங்குடியினர் இல்லை. பெண்கள் இல்லை. சிறுபான்மையினர் இல்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் இயக்குநரவை குறித்து தரப்பட்டுள்ள விவரங்களும் இப்படித்தான் உள்ளது.

மொத்தமுள்ள 98 இயக்குநர்களில் பட்டியல் சாதிகளை சேர்ந்தவர்கள் 6 பேர். பழங்குடியினர், சிறுபான்மையினர் தலா ஒருவர். பெண்கள் எண்ணிக்கை 12 பேர். மக்கள் தொகை சதவீதத்திற்கும் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்தான்.

அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மை மற்றும் பெண்கள் ஒருவர் கூட இல்லை.


இட ஒதுக்கீடு இல்லாத பதவிகளில் எந்த அளவுக்கு பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கு அமைச்சரின் பதிலே சான்று.

1/2… pic.twitter.com/G2qfouYe4j

— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 6, 2025

எல்.ஐ.சியின் இயக்குனரவையில் மொத்தமுள்ள 13 பேரில் பட்டியல் சாதியினர், சிறுபான்மையினர் எவருமே இல்லை. ஒரே ஒருவர் பழங்குடியினர். ஒரே ஒரு பெண். எல்.ஐ.சியின் தலைவர் பொறுப்பில் உள்ளவரும் மேற்கண்ட பிரிவினைச் சேர்ந்தவர் இல்லை.

அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இயக்குனரவையில் மொத்தமுள்ள 48 பேரில் பட்டியல் சாதியினர் 5 பேர் மட்டுமே. சிறுபான்மையினர் இல்லை. பழங்குடியினர் இல்லை. 18 பேர் பெண்கள். அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் 6 பேரில் பட்டியல் சாதியினர் ஒருவர். சிறுபான்மையினர் இல்லை. பழங்குடியினர் இல்லை. 3 பேர் பெண்கள்.

“அமைச்சரின் பதில் வெறும் புள்ளி விவரங்கள் அல்ல. சாதி பாகுபாடுகளின் வெளிப்பாடே. இட ஒதுக்கீடு இல்லாத பதவிகளில் எந்த அளவுக்கு பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இது சாட்சியம். அரசு நிறுவனங்களின் கதியே இதுவென்றால் தனியார் நிறுவனங்களில் எல்லாம் என்ன நிலைமை இருக்கும்!” என்று சு.வெங்கடேசன் எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 06, 2025 5:07 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

நிதியை கையாளும் உயர் பொறுப்புகளில் எத்தனை எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மையினர்? – சு. வெங்கடேசன் எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு பதில்



.

Previous Post

தொடரிலிருந்து விலகியவரை நினைவுகூர்ந்த பாக்கியலட்சுமி நடிகர்!

Next Post

ஐசிசி ஜூலை மாத விருதுக்கான போட்டியில் 3 கேப்டன்கள்! முச்சதம் விளாசிய முல்டருக்கு கிடைக்குமா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஐசிசி ஜூலை மாத விருதுக்கான போட்டியில் 3 கேப்டன்கள்! முச்சதம் விளாசிய முல்டருக்கு கிடைக்குமா?

ஐசிசி ஜூலை மாத விருதுக்கான போட்டியில் 3 கேப்டன்கள்! முச்சதம் விளாசிய முல்டருக்கு கிடைக்குமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In