பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகிய நடிகர் விஷாலை, அந்தத் தொடரில் நடிக்கும் நடிகர் சதீஷ் நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல், 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர், இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ள நிலையில், இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
பாக்கியலட்சுமி தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் வரும் வெள்ளிக்கிழமை(ஆக. 8) ஒளிபரப்பாகவுள்ளன.
கதைப்படி, பாக்கியலட்சுமியின் கணவன் கோபி திருந்தி, பாக்கியலட்சுமி உடன் இணைகிறார், இனியா – ஆகாஷ் திருமணம் நடப்பதுடன் தொடர் நிறைவடைகிறது.
