
கோவை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய மாநகரங்களில் ஒன்றான கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. மாநகரின் மொத்த பரப்பளவு 257.04 சதுர கிலோ மீட்டர் ஆகும். மாநகரில் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியாறு கூட்டுக்குடிநீர் திட்டம், வடவள்ளி – கவுண்டம்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் தினமும் சராசரியாக 200 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) அளவுக்கும் அதிகமாக குடிநீர் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

