Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர்: “ராணுவ நடவடிக்கை இன்னும் முடியவில்லை” – இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 13, 2025
in அரசியல் செய்திகள்
0
ஆபரேஷன் சிந்தூர்: “ராணுவ நடவடிக்கை இன்னும் முடியவில்லை” – இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. அதைத்தொடர்ந்து இந்தியா மீது பாகிஸ்தான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்கியது. இதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. கடந்த நான்கு நாட்களாக நீடித்த இந்தியா – பாகிஸ்தான் மோதல், போராக மாறும் என அச்சம் எழுந்த நிலையில், திடீரென இரு தரப்பும் சண்டையை நிறுத்திக்கொள்ள முன் வந்தன.

இதைத்தொடர்ந்து இரு நாட்டு எல்லையில் அமைதி திரும்பியது. காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு, பூஞ்ச், குப்வாரா, ரஜெளரி, சம்பா, நெளஷேரா, அக்னூர், உரி, பாராமுல்லா உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம் போல் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.

சாலையோர வியாபாரிகள் காலையிலேயே வியாபாரத்தை தொடங்கினர். மளிகைக் கடைகள், தேநீர் கடைகள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கின. கடந்த சில தினங்களாக வெறிச்சோடிய சாலைகளில் தற்போது வாகனங்கள் செல்லத் தொடங்கின. சனிக்கிழமை இரவு முதல் இரு நாட்டு எல்லையில் டிரோன் தாக்குதல், பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிச் சண்டை, முன்னெச்சரிக்கை சைரன் இல்லாததால் அமைதியான சூழல் நிலவுகிறது.

இரு நாட்டுப் படைகளின் சண்டை காரணமாக பூஞ்ச் பகுதியில் எல்லையோர கிராமங்களில் ஓயாமல் குண்டு வெடிப்பு சத்தமும், புகைமூட்டமும் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அமைதியாக காட்சியளித்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ், பெரோஷ்பூர், பதான்கோட் உள்ளிட்ட எல்லையோர பகுதிகளில் அமைதி நிலை திரும்பியது.

அதேநேரம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் உள்ள குருத்வாராவிற்கு பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. இதைத்தொடர்ந்து காலை முதல் மக்கள் அன்றாட பணிகளில் ஈடுபட்டனர். பார்மர் பகுதியில் காலை முதல் வாகனப் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.

The Indian Air Force (IAF) has successfully executed its assigned tasks in Operation Sindoor, with precision and professionalism. Operations were conducted in a deliberate and discreet manner, aligned with National Objectives.

Since the Operations are still ongoing, a detailed…


— Indian Air Force (@IAF_MCC) May 11, 2025

இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ள விமானப்படை, ராணுவ நடவடிக்கை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், சரியான நேரத்தில் இது குறித்து விளக்கமளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்பவோ, நம்பவோ வேண்டாம் என்றும் விமானப்படை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

ஆபரேஷன் சிந்தூர்: “ராணுவ நடவடிக்கை இன்னும் முடியவில்லை” – இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு



.

Previous Post

9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை! பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு!

Next Post

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு ரிசல்ட் வெளியானது.. மதிப்பெண்களை சரிபார்க்க நேரடி இணைப்பு இதோ!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு ரிசல்ட் வெளியானது.. மதிப்பெண்களை சரிபார்க்க நேரடி இணைப்பு இதோ!

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு ரிசல்ட் வெளியானது.. மதிப்பெண்களை சரிபார்க்க நேரடி இணைப்பு இதோ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In