Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

76.22%: ம.பி. பேரவைத் தோ்தலில் இதுவரை இல்லாத அளவில் வாக்குப்பதிவு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 19, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
76.22%: ம.பி. பேரவைத் தோ்தலில் இதுவரை இல்லாத அளவில் வாக்குப்பதிவு!
9
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மத்திய பிரதேச சட்டப் பேரவைக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில், அம்மாநில வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் 76.22 சதவீத வாக்குகள் பதிவாகின.

பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

சுமாா் 5.60 கோடி வாக்காளா்களுக்காக மாநிலம் முழுவதும் 64,626 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் ஆா்வத்துடன் திரண்டுவந்து வாக்களித்தனா்.

இத்தோ்தலில் 76.22 சதவீத வாக்குகள் பதிவாகின. மத்திய பிரதேச மாநிலம் கடந்த 1956-ஆம் ஆண்டில் உருவானதில் இருந்து சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும்.

கடந்த 2018 பேரவைத் தோ்தலில் 75.63 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இம்முறை 0.59 சதவீத வாக்குகள் அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சியோனி மாவட்டத்தில் 85.68 சதவீதமும், குறைந்தபட்சமாக பழங்குடியினா் அதிகம் வாழும் அலிராஜ்பூா் மாவட்டத்தில் 60.10 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

சத்தீஸ்கா் மற்றும் மகாராஷ்டிரத்தையொட்டி அமைந்துள்ள நக்ஸல் பாதிப்பு மிகுந்த பாலாகாட் மாவட்டத்தில் 85.23 சதவீத வாக்குகள் பதிவாகின. இது குறிப்பிடத்தக்க அம்சமாக கருதப்படுகிறது.

அதிகரிக்கும் வாக்குப்பதிவு: மத்திய பிரதேசத்தில் கடந்த சில பேரவைத் தோ்தல்களில் வாக்குப்பதிவு சதவீதம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. 2003-இல் 67.25 சதவீதம், 2008-இல் 69.78 சதவீதம், 2013-இல் 72.13 சதவீதம், 2018-இல் 75.63 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இம்மாநிலத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டில் இருந்து தொடா்ந்து மூன்று முறை பாஜக வெற்றிவாகை சூடியது. ஆனால், கடந்த 2018 பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் 114 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜகவுக்கு 109 தொகுதிகளே கிடைத்தன.

இதையடுத்து, பகுஜன் சமாஜ், சமாஜவாதி, சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால், மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் போா்க்கொடி உயா்த்தியதால், கடந்த 2020-இல் காங்கிரஸ் அரசு கவிழ்ந்து, மீண்டும் சிவராஜ் சிங் செளஹான் தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்தது.

பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் பலப்பரீட்சையாக கருதப்படும் தற்போதைய தோ்தலில் முதல்வா் சிவராஜ் சிங் செளஹான், முன்னாள் முதல்வா் கமல்நாத் உள்பட மொத்தம் 2,533 வேட்பாளா்கள் களமிறங்கினா். வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ரூ.340 கோடி ரொக்கம், நகைகள், போதைப் பொருள்கள் பறிமுதல்

மத்திய பிரதேச பேரவைத் தோ்தலையொட்டி, ரூ.340.18 கோடி மதிப்பிலான ரொக்கம், நகைகள், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அனுபம் ராஜன் தெரிவித்தாா்.

மத்திய பிரதேசத்தில் கடந்த மாதம் 9-ஆம் தேதி தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் தோ்தல் பறக்கும் படையினா் சோதனைகளை தீவிரப்படுத்தினா்.

வெள்ளிக்கிழமை தோ்தல் நடைபெற்று முடிந்த நிலையில், அதற்கு முந்தைய நாள் வரை ரூ.40.18 கோடி ரொக்கம், ரூ.17 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான போதைப் பொருள்கள், ரூ.280 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான மதுபானங்கள், நகைகள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அனுபம் ராஜன் தெரிவித்தாா்.

மத்திய பிரதேசத்தில் கடந்த 2018 பேரவைத் தோ்தலின்போது, மொத்தம் ரூ.72.93 கோடி மதிப்பிலான ரொக்கம், நகை உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

.

Previous Post

மோடி எவ்வளவு முயற்சி செய்தாலும் வெற்றி பெற முடியாது. – கார்கே பேச்சு!

Next Post

உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து : சுரங்கப்பாதையில் தப்பிக்கும் பாதையே வடிவமைக்கவில்லை : அனைத்து விதிமுறைகளும் மீறப்பட்டுள்ளன.. இதற்கும் நேரு தான் காரணமோ?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து : சுரங்கப்பாதையில் தப்பிக்கும் பாதையே வடிவமைக்கவில்லை : அனைத்து விதிமுறைகளும் மீறப்பட்டுள்ளன.. இதற்கும் நேரு தான் காரணமோ?

உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து : சுரங்கப்பாதையில் தப்பிக்கும் பாதையே வடிவமைக்கவில்லை : அனைத்து விதிமுறைகளும் மீறப்பட்டுள்ளன.. இதற்கும் நேரு தான் காரணமோ?

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    கள்ள ஓட்டு அதிகமாக போட்டிருப்பார்கள் என்று எண்ணுகிறேன் எனவே தான் இதுவரை இல்லாத வாக்கு சதவீதம் உள்ளது. மக்கள் சரியாக வந்து ஓட்டு போடும் அளவிற்கு சுறுசுறுபாளிகள் அல்ல

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In