Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

லடாக்: பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்து 7 பேர் பலி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 22, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
லடாக்: பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்து 7 பேர் பலி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


லடாக்கின் லே மாவட்டத்தில் பேருந்து ஒன்று சாலையை விட்டு விலகி 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் 7 பேர் பலியாகினர். மேலும், 20 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளி ஊழியர்களை திருமண நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்ற பேருந்து, துர்புக் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததாக லே மாவட்ட துணை ஆணையர் சந்தோஷ் சுகதேவ் தெரிவித்தார்.

லடாக்கின் துர்புக் அருகே பணியில் இருந்த இந்திய இராணுவ வீரர்கள், இன்று காலை 11 மணியளவில் 27 பயணிகளுடன் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாகவும், இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும், 3 குழந்தைகள், 17 பெண்கள் உள்பட 20 பேர் காயமடைந்ததாகவும் இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள ராணுவப் படையினர் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

காயமடைந்த 27 பேரையும் ராணுவ வீரர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு விரைவாக கொண்டு சென்றனர்.

காயமடைந்தவர்கள் முதலில் டாங்ஸ்டேயில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் மற்றும் 14 விமானங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை லேயில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர், மேல் சிகிச்சைக்காக லேயில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.



.

Previous Post

TVK: தடுமாறிய நிர்வாகி, தைரியப்படுத்திய விஜய்; கண்ணீரோடு புஸ்ஸி ஆனந்த் – த.வெ.க கொடி விழா ஹைலைட்ஸ்! | Vijay’s party TVK Flag Day Highlights

Next Post

விமானப் பயணிகளுக்கு முக்கிய அலெர்ட்… லக்கேஜ் விதிகளில் மாற்றம் செய்த ஏர் இந்தியா விமான நிறுவனம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விமானப் பயணிகளுக்கு முக்கிய அலெர்ட்… லக்கேஜ் விதிகளில் மாற்றம் செய்த ஏர் இந்தியா விமான நிறுவனம்!

விமானப் பயணிகளுக்கு முக்கிய அலெர்ட்... லக்கேஜ் விதிகளில் மாற்றம் செய்த ஏர் இந்தியா விமான நிறுவனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In