Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பாழடைந்த கிணற்றில் வீசப்பட்ட 5,000 அரசுப்பள்ளி சீருடைகள்… மாணவர்கள் அதிர்ச்சி; பெற்றோர் வேதனை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 17, 2024
in Default
1
பாழடைந்த கிணற்றில் வீசப்பட்ட 5,000 அரசுப்பள்ளி சீருடைகள்… மாணவர்கள் அதிர்ச்சி; பெற்றோர் வேதனை!
94
SHARES
151
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே பாழடைந்த கிணற்றில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி சீருடைகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை புதிய பேருந்து நிலையம் பின்புறம் இடுகாடு பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவ்வழியாக விவசாயத்திற்கு சென்ற விவசாயிகள் சிலர், அங்கிருந்து பாழடைந்த கிணறு ஒன்றில் அரசுப்பள்ளி சீருடைகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல்துறையினருக்கும், வருவாய்துறையினருக்கும் அவர்கள் தகவல் அளித்தனர்.

கந்தர்வக்கோட்டை புதிய பேருந்து நிலையம்

கந்தர்வக்கோட்டை புதிய பேருந்து நிலையம்

சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பார்வையிட்ட போது, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீருடைகள் அங்கு கிடந்தது தெரியவந்தது. சில சீருடைகள் தீயில் எரிந்து நாசமான நிலையில் கிடந்ததால், மர்ம நபர்கள் அந்த துணிகளுக்கு தீ வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை வழங்கக்கூடிய சீருடைகள் அங்கு கிடந்துள்ளது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்தது.

அரசுப்பள்ளி சீருடைகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வேதனை

அரசுப்பள்ளி சீருடைகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வேதனை

இதைக் கொண்டு வந்து கொட்டியவர்கள் சீமை கருவேல காட்டுப்பகுதியில் அவற்றை தீ வைத்து எரிக்க முயன்றது தெரியவந்துள்ளதால், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் அரசுப்பள்ளிகளில் பயின்று வரும் நிலையில், அவர்களுக்கு வழங்க வேண்டிய சீருடையை கல்வித்துறை அதிகாரிகள் ஏன் வழங்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous Post

ஒரே ரூமில் 8 பேர்.. இதான் விபத்துக்கு காரணம்! விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து பற்றி ஆட்சியர் விளக்கம்..

Next Post

பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் நிதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் நிதி

பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் நிதி

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    இனிமேல் பள்ளி சீருடைகளை யாருக்கும் தெரியாத இடத்தில் போடுவார்கள் அவர்கள் குப்பையின் வீசுவதை இனி கண்டுபிடிக்க இயலாது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In